விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து புதுக்கோட்டையில் வழக்கறிஞர்கள் சாலை மறியல் மற்றும் நீதிமன்ற பணி புறக்கணிப்பு.!!விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து புதுக்கோட்டை வழக்கறிஞர்கள் சாலை மறியல் மற்றும் நீதிமன்ற பணி புறக்கணிப்பு செய்தனர்.

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு அமைப்பினரும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதைத் தொடர்ந்து இன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் நீதிமன்றம் முன்பு புதுக்கோட்டை மாவட்ட வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ஆறுமுகம் தலைமையில்  அனைத்து வழக்கறிஞர்களும் நீதிமன்ற வளாகத்தை விட்டு வெளியே வந்து திடீரென சாலை மறியலிலும் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். 

விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்க கோரியும் அவர்களைப் பாதுகாக்க கோரியும் பல்வேறு கோஷங்களை எழுப்பி பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்களை  மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இதனால் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. மேலும் இன்று ஒருநாள் நீதிமன்றத்தில் வழக்காடாமல் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனால் இன்று நடைபெற இருந்த அனைத்து வழக்குகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments