கோபாலப்பட்டிணத்தில் தொடர் மழை: வரலாறு காணாத அளவிற்கு நிரம்பிய குளங்கள்.!!புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் நிவர் புயல் காரணமாக ஏற்கனவே கனமழை பெய்தது. தற்போது புரெவி புயல் காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள் நிரம்பி வழிகிறது.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம்  ஆவுடையார்கோவில் தாலுகா, நாட்டானிபுரசக்குடி ஊராட்சி மீமிசல் அருகாமையில் உள்ள கோபாலப்பட்டிணம் பகுதியில் கடந்த மூன்று ஆண்டுகளாக (2015-2018) போதிய மழை இல்லாமல், குளங்களில் உள்ள நீர் மாசடைந்து வற்றிய நிலையில் காணப்பட்டு வந்தது. கடந்த ஓராண்டு (2019) நல்ல பெய்தது குளங்கள் நிரம்பியது.

கோபாலப்பட்டிணத்தில் பல ஆண்டுகளுக்கு பிறகு கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் கன மழையால், மக்கள் பயன்பாட்டுக்குரிய காட்டுகுளம், நெடுங்குளம் வேகமாக நிரம்பியது.

குளிக்க வரும் மக்கள், குளத்துக்கரையில் நின்று புகைப்படம் எடுத்தும், குளத்தில் நீராடியும், நீச்சல் அடித்தும் மகிழ்ந்து வருகின்றனர்.

இதனால் பொதுமக்கள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

காட்டுக்குளம், நெடுங்குளம் பல ஆண்டுகளுக்கு பிறகு முழு கொள்ளவை எட்டியுள்ளது மட்டுமல்லாது முன்னர் வற்றி கிடந்த குளம் இப்பொழுது பார்ப்பதற்கு மிகவும் ரம்மியமாக காட்சியளிக்கிறது.

இதனால் வெளிநாட்டில் குழாய் தண்ணீரில் குளித்து வரும் கோபாலப்பட்டிணம் உறவுகள் நாம் எப்பொழுது ஊருக்கு வந்து இந்த குளத்தில் நீச்சலடித்து குளிக்க போகிறோம் என்ற ஏக்கத்தில் தவிக்கிறார்கள்.

தொடர் மழையால் குளங்கள் நிரம்பி இருப்பது கோபாலப்பட்டிணம் மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பு:
குளத்தில் தண்ணீர் அதிகமாக இருப்பதால் சிறியவர்கள் முடிந்த அளவுக்கு அனுப்ப வேண்டாம்.

அனுப்பும் பட்சத்தில் பெரியவர்களுடன் சேர்த்து சிறியவர்களை அனுப்புங்கள்.

அல்லாஹ் தன் திருமறையில்,

‘காற்றை சூல் கொண்டதாக நாமே அனுப்புகிறோம். பின்னர் வானிலிருந்து நீர் பொழிவித்து அதனை உங்களுக்கும் புகட்டுகிறோம், நீங்கள் அதனை சேமித்து வைப்போராய் இல்லை’ (15: 22) என்று குறிப்பிடுகிறான்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments