தண்ணீர் வருவதை அறிய குழாயில் விசிலை பொருத்திய ஆசிரியர்




கந்தர்வகோட்டை அருகில் உள்ள அண்டனூர் கிராமத்தை சேர்ந்த ரங்கசாமி மகன் பாலமுருகன். இவர் ஒரு தனியார் பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது ஊர் கிராம ஊராட்சி ஆக இருப்பதால் பல்வேறு காரணங்களினால் ஊராட்சியின் மூலம் வினியோகம் செய்யப்படுகின்ற குடிதண்ணீர் எந்த நேரத்தில் வரும் என்பது தெரியாத நிலை இருந்தது. சில நேரங்களிலும், இரவு நேரங்களிலும் தண்ணீர் வருவது வீட்டில் உள்ளவர்களுக்கு தெரியாமல் வீட்டு வாசலில் குளம் போல் தண்ணீர் தேங்கி நிற்கும்.

 
இதனை கண்ட அறிவியல் ஆசிரியர் தண்ணீர் வீணாவதை தடுக்க என்ன செய்வது என்று யோசித்தார். அப்போது தண்ணீர் குழாயை மூடுவதற்கு பயன்படுத்தப்படும் மூடியில் சிறு துளையிட்டு அதில் ஒரு விசிலை பொருத்தினார். தண்ணீர் வருவதற்கு முன் குழாயில் காற்று நிரம்பி இருக்கும். இந்த விசில் பொருத்திய மூடியை குழாயில் போட்டு மூடி விட்டாள் குழாயில் தண்ணீர் வந்தவுடன் அதில் உள்ள காற்று வெளியேறி விசில் அடிக்க ஆரம்பித்து விடும். இப்போது தண்ணீர் வரப்போவதை நாம் அறிந்துகொள்ள முடியும் இதன் மூலம் தண்ணீர் வீணாவது தடுக்கப்படும். இந்த எளிமையான கருவியை கண்டுபிடித்த அறிவியல் ஆசிரியர் பாலமுருகனை சக ஆசிரியர்களும் பொதுமக்களும் பாராட்டினார்கள்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments