புதுக்கோட்டை: குளத்தில் குளிக்க சென்ற சிறுமி தண்ணீரில் மூழ்கி பலி !




புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே குளத்தில் குளிக்கச் சென்ற போது தண்ணீரில் மூழ்கி 14 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகேயுள்ள கணபதிபுரத்தைச் சேர்ந்தவர்கள் சங்கர் – சரிதா தம்பதியினரின் மகள் அஞ்சலி (14). இவர் கந்தர்வகோட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பள்ளி திறக்கப்படாததால், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அஞ்சலி, தனது சித்தப்பா வீடான ஆலங்குடி அருகேயுள்ள கே.வி.கோட்டைக்கு வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று அப்பகுதியில் உள்ள பெருங்குளத்தில் குளிப்பதற்காக அதே பகுதியைச் சேர்ந்த ஸ்ரீநிதி என்ற சிறுமியுடன் சென்றுள்ளார். அப்போது, குளத்தில் சட்டவிரோதமாக மண் எடுப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தண்ணீர் அதிக அளவில் தேங்கி இருந்துள்ளது. இதனை அறியாத அஞ்சலி குளிப்பதற்காக அந்த பள்ளத்தில் இறங்கிய போது தண்ணீரில் மூழ்கியுள்ளார்.

அஞ்சலியை காப்பாற்ற அவருடன் சென்ற ஸ்ரீநிதி முயன்றதோடு அவரை காப்பாற்ற கோரி கூச்சலிட்டு உள்ளார். இதனை பார்த்த , அப்பகுதியில் மரம் வெட்டும் பணியில் ஈடுபட்ட சிலர் குளத்திற்குள் இறங்கி அஞ்சலியை மீட்டு சிகிச்சைக்காக ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அஞ்சலியை பிரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கெனவே இறந்துவிட்டதாக கூறினர்.

 இதுகுறித்து, தகவலறிந்த ஆலங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே குளத்தில் குளிக்கச் சென்ற நிலையில் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் குறித்து ஆலங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments