காஸ் சிலிண்டர் விலை மேலும் ரூ.50 உயர்வு
சென்னை: மானியமில்லாத காஸ் சிலிண்டர் விலை கடந்த டிச.,1ம் தேதி 50 ரூபாய் உயர்ந்த நிலையில், இன்று (டிச.,15) மீண்டும் ரூ.50 உயர்ந்துள்ளது.

தற்போது, ஒவ்வொரு வீட்டிற்கும் மானிய விலையில், ஆண்டிற்கு 12 காஸ் சிலிண்டர்கள் (14.2 கிலோ எடை கொண்டவை) விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு மேல் கூடுதலான சிலிண்டர்கள் தேவைப்பட்டால், சந்தை விலை கொடுத்துதான் வாங்க வேண்டும். இந்தியன் ஆயில் நிறுவனத்தின் இண்டேன், இந்தியா முழுவதும் தினந்தோறும் 30 லட்சம் சிலிண்டர்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில், கடந்த டிச.,1ம் தேதி 50 ரூபாய் உயர்த்தப்பட்ட நிலையில், இன்று முதல் மேலும் ரூ.50 உயர்த்தப்படுவதாக இண்டேன் நிறுவனம் அறிவித்துள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments