அறந்தாங்கி ஒன்றியத்தில் பள்ளி செல்லா குழந்தைகள் 59 பேர் கண்டறிந்து பள்ளியில் சேர்ப்பு



     

   
    அறந்தாங்கி ஒன்றியத்தில்  பள்ளி செல்லா குழந்தைகள் 59 பேர் கண்டறிந்து   பள்ளியில் சேர்ப்பு

அறந்தாங்கி வட்டார வள மையத்தில் பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளை கணக்கெடுக்கும்  பணி நவம்பர் 21 முதல் டிசம்பர் 15 வரை களப்பணியானது
நிறைவுப்பெற்றது.

புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் தா. விஜயலட்சுமி அவர்களின் வழிகாட்டுதலின் படி    அறந்தாங்கி வட்டார வள மையத்தில் பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் கணக்கெடுப்பு பணியில் 59 மாணவர்கள் கண்டறியப்பட்டு பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளது.

இலவச கட்டாய கல்வி உரிமை சட்டப்படி 6  முதல் 14 வயது வரை   உள்ள அனைத்து குழந்தைகளையும் முறையான பள்ளிகளில் சேர்த்து கல்வி கற்க வழிவகை செய்ய வேண்டியது ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் நோக்கமாக இருப்பதால் 6 - 14 வயதுடைய பள்ளி செல்லா இடைநின்ற  மற்றும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகளை கண்டறிந்து அவர்களை வயதுக்கேற்ற வகுப்பில் சேர்வதற்கு கணக்கெடுப்பு பணி இந்த ஆண்டு நவம்பர் 21 முதல் டிசம்பர் 15 வரை நடைபெற்றது..

இக் கணக்கெடுப்பு பணியில் அனைத்து ஆசிரிய பயிற்றுனர்கள் சிறப்பாசிரியர்கள் இணைந்து செயல்பட்டனர்.

இக்கணக்கெடுப்பு பணிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் வட்டார வளமைய மேற்பார்வையாளர் திருமதி சிவயோகம் பொறுப்பு மற்றும் ஆசிரியர் பயிற்றுனர் ஈஸ்வரன் செய்திருந்தார்கள்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments