எஸ்.டி.பி.ஐ. கட்சியின் விருதுகள் வழங்கும் விழா - சிறந்த சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவிப்பு




எஸ்.டி.பி.ஐ. கட்சியின் 2020-ஆம் ஆண்டிற்கான சாதனையாளர்களை கௌரவிக்கும் விருதுகள் வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது.

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக நான்காம் ஆண்டாக சமூகத்தில் பல்வேறு தளங்களில் மக்களுக்கு சேவையாற்றிய சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கும் விழா சென்னை பல்லாவரத்தில் உள்ள ஜமால் பேலஸில் டிசம்பர் 17 வியாழக்கிழமை அன்று நடைபெற்றது. 

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்ட எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய துணைத்தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் முஹம்மது சேக் அன்சாரி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். 

இவ்விழாவில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அப்துல் ஹமீது வரவேற்புரையாற்றினார். பொதுச்செயலாளர் நிஜாம் முகைதீன் துவக்க உரையாற்றினார். மாநில பொதுச்செயலாளர் அச.உமர் ஃபாரூக் நிகழ்ச்சி குறித்து உரையாற்றினார். மாநில செயலாளர் அமீர் ஹம்ஸா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். மேலும் இவ்விழாவில் மாநில செயலாளர்கள் அஹமது நவவி, வழக்கறிஞர் சஃபியா நிஜாமுதீன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஏ.கே.கரீம், ஷபீக் அஹமது, வழக்கறிஞர் ராஜா முஹம்மது, டாக்டர் சேக் மீரான், பசீர் சுல்தான், வர்த்தகர் அணி மாநில தலைவர் முகைதீன், பொதுச்செயலாளர் கலீல் ரஹ்மான், வடசென்னை மாவட்ட தலைவர் முஹம்மது ரசீத், பொதுச்செயலாளர் புஸ்பராஜ், மத்தியசென்னை மாவட்ட பொதுச்செயலாளர் எஸ்.வி.ராஜா, தென்சென்னை மாவட்ட தலைவர் சலீம், பொதுச்செயலாளர் அன்சாரி, செங்கல்பட்டு மாவட்ட தலைவர் தமீம் அன்சாரி, காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் தமீம் அன்சாரி, திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தலைவர் செய்யது அஹமது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.













இவ்விழாவின் முக்கிய நிகழ்வாக காயிதே மில்லத் விருது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் அவர்களுக்கும், டாக்டர் அம்பேத்கர் விருது நீலப்புலிகள் இயக்கத்தின் நிறுவனர் மறைந்த டி.எம்.உமர் பாரூக் அவர்களுக்கும், தந்தை பெரியார் விருது தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச்செயலாளர் தியாகு அவர்களுக்கும், கவிக்கோ விருது தமிழ்துறை வாணியம்பாடி இஸ்லாமிய கல்லூரியின் முன்னாள் தலைவர் பேராசிரியர் தி.மு.அப்துல் காதர் அவர்களுக்கும், பழனிபாபா விருது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில செயலாளர் காயல் மஹபூப் அவர்களுக்கும், காமராஜர் விருது சென்னை பல்கலைக் கழக முன்னாள் துணை வேந்தர் பேராசிரியர் சாதிக் அவர்களுக்கும்,  நம்மாழ்வார் விருது இயற்கை விவசாயி சரோஜா குமார் அவர்களுக்கும், அன்னை தெரசா விருது லயோலா கல்லூரியின் பேராசிரியரும், டிசம்பர் 3 இயக்கத்தின் தலைவருமான பேராசிரியர் தீபக் நாதன் அவர்களுக்கும் வழங்கப்பட்டன. இந்நிகழ்வின் இறுதியாக எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில செயலாளர் ரத்தினம் நன்றி கூறினார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments