புதிய தொழிற்பள்ளி துவங்குதல் தொடர் அங்கீகாரம் பெற விண்ணப்பிக்கலாம்
புதிய தொழிற்பள்ளி துவங்குதல் மற்றும் தொடர் அங்கீகாரம் பெற விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை கலெக்டர் உமா மகேஸ்வரி தெரிவித்ததாவது: 2021-2022ம் கல்வியாண்டுக்கு 1.7.2021 முதல் புதிய தொழிற்பள்ளிகள் துவங்குதல், தொடர் அங்கீகாரம் பெறுதல், தொழிற்பள்ளிகளில் புதிய தொழிற்பிரிவுகள், தொழிற்பிரிவுகளில் கூடுதல் அலகுகள் துவங்குதல் ஆகியவற்றுக்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக வரவேற்கப்படுகின்றன. இதை www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

2021- 2022ம் கல்வியாண்டுக்கு அங்கீகாரம் பெற ஒரு தொழிற்பள்ளி ஒரு இணையதள விண்ணப்பம் சமர்ப்பித்தால் போதுமானது. விண்ணப்பிக்கவுள்ள அனைத்து தொழிற்பிரிவுகள், கூடுதல் அலகுகளுக்கு தேவையான விவரங்கள் அனைத்தும் ஒரு விண்ணப்பத்தில் மட்டுமே அளிக்க வேண்டும். நெப்ட் மூலம் தொழிற்பள்ளி பணம் (விண்ணப்ப கட்டணம் மற்றும் ஆய்வு கட்டணம்) செலுத்தும்போது தொழிற்பள்ளியின் வங்கி கணக்கில் இருந்து செய்யப்பட வேண்டும்.

விண்ணப்ப கட்டணம் மற்றும் ஆய்வுக்கட்டணம் எந்த தொழிற்பள்ளிக்காக செலுத்தப்பட்டுள்ளது என்பதை கண்டறிய ஏதுவாக தாளாளர் பெயரில் உள்ள வங்கி கணக்கிலிருந்து ஆர்டிஜீஎஸ், நெப்ட் மூலம் செலுத்தலாம். விண்ணப்பிக்கும் ஒவ்வொரு தொழிற்பிரிவிற்கும் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும். விண்ணப்ப கட்டணம், ஆய்வு கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் வழிமுறைகள் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு ஏப்ரல் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு www.skilltraining.tn.gov.in என்ற இளையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம். சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருநெல்வேலி, திருச்சி, விழுப்புரம் மற்றும் சேலம் ஆகிய இடங்களில் உள்ள மண்டல பயிற்சி இணை இயக்குனர் அலுவலகங்களை தொடர்பு கொண்டும் விவரம் பெறலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments