சென்னைக்கு அடுத்தபடியாக புதுக்கோட்டையில் ஆயுர்வேத மருந்துகள் தயாரிக்கும் நிறுவனம் தொடங்கப்படவுள்ளது.      

 
    சென்னைக்கு அடுத்தபடியாக புதுக்கோட்டையில் தமிழக அரசின் தமிழ்நாடு மூலிகை பண்ணை மற்றும் மூலிகை மருத்துவ கழகம் சார்பில் 24 வகையான சித்த ஆயுர்வேத மருந்துகள் தயாரிக்கும் நிறுவனம் தொடங்கப்பட உள்ளது அதற்கான முன்னேற்பாடு பணிகள் தொடங்கியது
தமிழக அரசு அல்லோபதி மருத்துவத்திற்கு இணையாக சித்தா ஆயுர்வேதம் ஆகிய மருத்துவ சிகிச்சைகளையும் ஊக்குவித்து வருகிறது. இதையடுத்து தமிழக இந்திய மருத்துவம் மற்றும் சித்த மருத்துவம் நிறுவனத்தின் டாம்ப்கால் என்று அழைக்கப்படும் தமிழ்நாடு மூலிகை பண்ணைகள் மற்றும் மூலிகை மருந்து கழகம் சார்பில் கபசுரக் குடிநீர் நிலவேம்பு குடிநீர் டாம்ப்கால் மூலிகை எண்ணெய் சூரண மாத்திரைகள் என 24 வகையான மருந்துகள்  தயார் செய்யப்பட்டு வருகிறது

தற்போது சென்னையில் மட்டும் தான் இது தயார் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னைக்கு அடுத்தபடியாக டாம்ப்கால் நிறுவனம் சார்பில் புதுக்கோட்டையில் 24 வகையான சித்தா ஆயுர்வேதா மருந்துகள் தயார் செய்யும் பணிகள் தொடங்க உள்ளது. புதுக்கோட்டை பழைய அரசு தலைமை மருத்துவமனை வளாகத்திற்குள் இந்த நிறுவனம் செயல்பட உள்ளது. முதற்கட்டமாக தற்போது கபசுரக் குடிநீர் மற்றும் நிலவேம்பு குடிநீர் தயார் செய்வதற்கான இயந்திரங்கள் நிறுவப்பட்ட விட்டது.

விரைவில் புதுக்கோட்டையில் இவைகள் தயார் செய்யப்படும். முதற்கட்டமாக கபசுரக் குடிநீர் மற்றும் நிலவேம்பு குடிநீர் தயார் செய்யப்பட்டாலும் விரைவில் தமிழ்நாடு மூலிகைப் பண்ணைகள் மற்றும் மூலிகை மருத்துவ கழகம் சார்பில் தயாரிக்கப்படும் 24 வகையான மருந்துகள் தயார் செய்யப்பட உள்ளது. புதுக்கோட்டையில் தொடங்கப்படும் இந்த நிறுவதிற்கான தனி அலுவலர் மற்றும் ஊழியர்கள் நியமிக்கப்பட்டு விட்டனர். இந்த நிறுவனம் புதுக்கோட்டையில் தொடங்கப்பட்டால் நேரடியாக 200 பேருக்கும் மறைமுகமாக 300 பேருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. புதுக்கோட்டையில் தொடங்கப்பட உள்ள இந்த நிறுவனத்திற்கான பூர்வாங்க மற்றும் முதற்கட்ட பணிகள் தொடங்கிவிட்டன விரைவில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இந்த நிறுவனத்தை தொடங்கி வைக்க உள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments