பிப்ரவரியில் 9,11-ம் வகுப்புகள் தொடங்குகிறதா? அமைச்சர் செங்கோட்டையன் முக்கிய தகவல்
பிப்ரவரி முதல் 9,11-ம் வகுப்புகள் திறப்பு குறித்து முதல்வர் தான் முடிவெடுப்பார் என்று ஈரோட்டில் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி அளித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாகப் பள்ளிகள் கடந்த மார்ச் மாதம் 3 ஆவது வாரம் முதல் மூடப்பட்டன. இதையடுத்து தனியார் பள்ளிகள் ஆன்லைன் வழியாக கல்வி கற்பிக்கின்றன. அரசு பள்ளிகள் கல்வித் தொலைக்காட்சியிலாக ஆன்லைன் வாயிலாகவும் மாணவர்களுக்கு பாடங்கள் நடத்துகின்றன.

இந்நிலையில் கொரோனா பரவல் தமிழகத்தில் குறைந்து கட்டுக்குள் வந்ததால் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. முதலில் கல்லூரிகள் திறக்கப்பட்டன.

அதன்பிறகு 10, 12-ம் வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. ஜனவரி 19-ம் தேதி முதல் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு, நிதியுதவி மற்றும் தனியார் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் திறக்கப்பட்டு இயங்கி வருகின்றன.

பள்ளி நுழைவு வாயிலில் வெப்பமானி கொண்டு மாணவர்கள், ஆசிரியர்கள் உடல் வெப்பப் பரிசோதனை செய்யப்பட்ட பின்பே வளாகத்துக்குள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். அதேபோல், வகுப்பறையில் மேஜைக்கு இருவர் வீதம் 20 முதல் 25 மாணவர்கள் வரை அமர வைக்கப்படுகிறார்கள்.. பள்ளி வளாகங்களில் முகக்கவசம் அணிதல், தனிநபர் இடைவெளி, கிருமிநாசினி பயன்பாடு உள்ளிட்ட கட்டுப்பாடுகள்முறையாகப் பின்பற்றப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் 9 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகளைத் திறக்க, பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டு வருகிறது. இதுகுறித்து, ஜனவரி 25-ம் தேதி ஆலோசனை நடத்தி, முதல்வரின் ஒப்புதலைப் பெற முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

இது தொடர்பாக ஈரோட்டில் கல்வி அமைச்சர் செங்கோட்டையன், பிப்ரவரி முதல் 9,11-ம் வகுப்புகள் திறப்பு குறித்து முதல்வர் தான் முடிவெடுப்பார் என்றார்.

சில பள்ளிகளில் கொரோனா தாக்கம் உள்ளதாக கூறப்படும் தகவல்கள் தவறானது. 2 ஆசிரியர்களுக்கு மட்டுமே கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments