கோட்டைப்பட்டினம் அருகே கார்-லாரி மோதிய விபத்தில் மேலும் ஒருவர் பலி
கோட்டைப்பட்டினம் அருகே உள்ள ஓடாவிமடம் கிராமத்தில் கடந்த 23-ந்தேதி அன்று காரும்-லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் காரில் சென்ற 8 பேரில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். படுகாயமடைந்த 5 பேரில், ஒருவர் மட்டும் புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரியிலும், 4 பேர் ராம்நாடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். 

இந்நிலையில் புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்த ராமநாதபுரம் மாவட்டம், தங்கச்சிமடம் பகுதியை சேர்ந்த சூசை மகன் சன்ஜார்ஜ் (வயது 45) நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து சன்ஜார்ஜ் இறந்தது மூலம் பலி எண்ணிக்கை 4-ஆக உயர்ந்துள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments