தைப்பூசத்தை முன்னிட்டு 15 ஆண்டுகளாக வடலூர் அன்னதானத்துக்கு 3 டன் காய்கறி அனுப்பும் இஸ்லாமியர்!வடலூர் சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபையில்  நடந்த அன்னதானத்துக்கு 3 டன் காய்கறிகளை இஸ்லாமியர் ஒருவர் அனுப்பி நெகிழ வைத்துள்ளார்.

வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்று பாடிய வள்ளலார் தோற்றுவித்த வடலூர் சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபையில்
தைப்பூச ஜோதி தரிசன விழா ஆண்டுதோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு 150 வது தைப்பூச திருவிழா கடந்த 27- ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இன்று காலை 6.00 மணிக்கு கருப்பு திரை, நீலத்திரை, பச்சைதிரை, செம்மைத்திரை, பொன்மைத் திரை, வெண்மைதிரை, கலப்பு திரை ஆகிய 7 திரைகள்  நீக்கப்பட்டு ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது.

ஜோதி தரிசனத்தை கண்ட பக்தர்கள் அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை என்று உச்சரித்தவாரே ஜோதி தரிசனத்தை கண்டு அகமகிழ்ந்தனர். தைப்பூச ஜோதியை முன்னிட்டு அன்னதானம் தொடர்ந்து நடைபெறும். ஆயிரக்கணக்கான மக்கள் அன்னதானத்தில் பங்கேற்று உணவு சாப்பிடுவார்கள்.

இதற்காகாக, ஏராளமானோர் அரிசி, பருப்பு, காய்பறிகளை நன்கொடையாக வழங்குவது வழக்கம். அந்த வகையில் காய்கறி வியாபரியாக பக்கீரான் என்ற இஸ்லாமியர் 3 டன் எடை கொண்ட காய்கறிகளை அன்னதானத்துக்கு 15 வருடங்களாக வழங்கி வருகிறார். இந்த ஆண்டும் பக்கீரான் 3 டன் எடைகளை கொண்ட காய்கறிகளை அனுப்பி வைத்தார். இஸ்லாமியராக இருந்தாலும் வள்ளலார் மீதுள்ள அன்பினால் பக்கீரான் இந்த சேவையை செய்து வருகிறார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments