துப்புறவு ஒப்பந்த தொழிலாளர்களுக்கு அரசு அறிவித்த பொங்கல் போனஸ் ரூ, 1000 வழங்க வேன்டும் உள்ளிட்டவைகளை கோரி அறந்தாங்கி நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்
துப்புறவு ஒப்பந்த தொழிலாளர்களுக்கு அரசு அறிவித்த பொங்கல் போனஸ் ரூ, 1000 வழங்க வேன்டும்.

                    புதுக்தோட்டை மாவட்டம் உள்ளாட்சித் துறை தொழிலாளர்கள் சங்கம் சிஜடியூ அறந்தாங்கி நகராட்சி கிளை சார்பாக நகராட்சி துப்புறவு ஒப்பந்த தொழிலாளர்களுக்கு அரசு அறிவித்த பொங்கல் போனஸ் ரூ 1000' வழங்க வேண்டும். மாதம் 5ம் தேதிக்குள் சம்பளம் வழங்க வேண்டும்,
         பல ஆண்டு காலம் வேலை செய்யும் நகராட்சி ஒப்பந்த துப்புறவு தொழிலாளர்களை பணி நிரந்தரப்படுத்த வேண்டும், குப்பை லாரியில் பெண் பணியாளர்களை பணி அமர்த்துவதை கைவிட வேண்டும்,  மழைகோட் உள்ளிட்ட பணி பாதுகாப்பு உபகரணம் தரமாக வழங்க வேண்டும், 

            மாவட்ட ஆட்சியர் அறிவித்த நாள் ஒன்றுக்கு ரு 410 சம்பளம் வழங்க வேண்டும் உள்பட பல கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு.சங்க கிளை தலைவர் எஸ்.கவிபாலா தலைமை வகித்தார், மாவட்ட தலைவர் க.முகமதலி ஜன்னா, சிபிஎம் தாலுகா செயலாளர் தென்றல் கருப்பையா, அடைக்கலம் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments