தனியாா் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு நலவாரியம் அமைக்கக் கோரிக்கை.!!



தனியார் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு நல வாரியம் அமைத்து தர வேண்டி புதுக்கோட்டை தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

புதுக்கோட்டை தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு செயற்குழு தலைவர் அசரப் அன்சாரி தலைமையில் செயல் தலைவர் சக்திவேல், டைமண்ட் பசீர் முன்னிலையில் நடைபெற்றது. 

புதுக்கோட்டை கே.எம் வளாகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு பல்வேறு ஒன்றியங்களிலிருந்து மெட்ரிக் மற்றும் நர்சரி பள்ளி தாளாளர்கள் கலந்துகொண்டனர்.

கூட்டமைப்பின் ஒருகிணைப்பாளர் ரமணன் மற்றும்  அமைப்புச் செயலாளர் முனைவர் பாண்டி செல்வம் ஆகியோர் தீர்மானங்களை முன் மொழிந்தனர்.

முன்னதாக கூட்டத்திற்கு வந்திருந்த அனைவரையும் செயலாளர் முத்துகருப்பன் வரவேற்றார். நிறைவாக பொருளாளர் மேசியா சந்தோஷம் நன்றி கூறினார்.

கூட்ட ஏற்பாடுகளை குழிபிறை ஸ்ரீ மீனாட்சி பள்ளி நிர்வாகி ராஜ், மதர்தெரசா பள்ளியின் அற்புத அலெக்சான்டர் மற்றும் கந்தசாமி ஆகியோர் செய்திருந்தனர். கூட்டத்தில் பின்வருமாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தீர்மானங்கள்

1.மாணவர்கள் எதிர்கால நலந்ன கருத்தில் கொண்டு எல்.கே.ஜி முதல் 12 வகுப்பு வரை அனைத்து வகை பள்ளிகளையும் உடனே திறக்க வேண்டும்.

 2.இக்கல்வியாண்டில் குறைந்தபட்சம் 130 வேலை நாட்களையாவது பள்ளிகளை நடத்த வேண்டும்.

3.சட்டமன்ற தேர்தல் நடக்கயிருக்கும் சூழ்நிலையில் நிர்வாக காரணங்களுக்கு மட்டும் பள்ளிகளை விடுமுறை விட்டு மீண்டும் பள்ளிகளை தொடர்ந்து நடத்த வேண்டும்.

4.தனியார் பள்ளி ஆசிரியர்கள், பள்ளிகளில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் ஆகியோர்களுக்கு தனிநல வாரியம் அமைக்க வேண்டும்.

5. பள்ளிகள் திறக்காத இந்த காலத்தில் தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவருக்கும் நிவாரணத்தொகையை அரசு வழங்க வேண்டும்.

6. நடப்பு 2020-21 ஆண்டிற்கான கல்வி கட்டணத்தை பள்ளிகளை நேரில் அழைக்காமல்  நிர்ணயம் செய்து நிர்ணயக்குழு உடனே  செய்து வழங்க வேண்டும்.

7. நடப்பு 2020-21ம் ஆண்டின் ஆர்டிஇ சேர்கையில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு இக்கல்வியாண்டில் அரசு நிர்ணயித்த தொகையை 70% கட்டணத்தை உடனே வழங்க வேண்டும்.

8. ஏற்கனவே அரசு அங்கீகாரத்துடன் செயல்படும் மெட்ரிக் மற்றும் நர்சரி பள்ளிகளின் கட்டிடங்களுக்கு டிடிசிபி பெறுவதிலிருந்து விளக்களிக்க வேண்டும்.

9.தனியார் பள்ளி ஆசிரியர்களை வருகின்ற சட்டமன்ற தேர்தல் பணிகளில் ஈடுபடுத்த அவர்களை கட்டாயப் படுத்தக்கூடாது.

10.நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளில் உடனடியாக நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும்.

11.புதுக்கோட்டை மாவட்டத்தில் செயல்படும் மெட்ரிக் மற்றும் பள்ளிகளின் அங்கீகாரத்தை புதுப்பித்து உடனுக்குடன் வழங்கிவரும் நர்சரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், புதுக்கோட்டை, அறந்தாங்கி மற்றும் இலுப்பூர் மாவட்ட கல்வி அலுவலர்கள், துணை ஆய்வாளர்கள் மற்றும் அனைத்து ஒன்றிய வட்டார கல்வி அலுவலர்கள் ஆகியோர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். 

12.கொரனா நோய் தொற்று குறைந்துவரும் இந்த சூழ்நிலையில் பொது மக்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் முகக்கவசம் அணிவதில் அலட்சியம் காட்டி வருகிறார்கள். இதனை கருத்தில் கொண்டு அணிவதை முக்கியத்துவத்தை மாவட்ட நிர்வாகம் அவர்களுக்கு விழிப்புணர்வு அளிக்க வேண்டும்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments