ஆவுடையார்கோவிலில் மழையால் சேதமடைந்த நெற்கதிர்களுக்கு நிவாரணம் வழங்ககோரி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்...புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் சுற்றுவட்டார பகுதியில் தொடர்மழையால் நெற்திர்கள் தண்ணீரில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பாதிக்கபட்ட விவசாயிகள் அனைவருக்கும் போர்க்கால அடிப்படையில் உரிய இழப்பீடு வழங்ககோரி ஆவுடையார்கோவில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிட் கட்சியின் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மாவட்ட பொருளாளர் சுப்பிரமணியன் தலைமையிலும், ஒன்றிய செயலாளர் கலந்தர் முன்னிலையிலும் தொடர்கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களில் விவசாயிகளுக்கு 100% சதவிகிதம் இழப்பீடு வழங்கிட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் துணை தாசில்தார் ஜபருல்லாவிடம் நிவாரணம் வழங்ககோரி மனுக்கொடுத்தனர். ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் தாலுகா செயலாளர் நெருப்பு முருகேஸ், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் வீரையா மற்றும் விவசாயிகள் ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments