ஒக்கூர் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா - முன்னாள் மாணவர்கள் அழைப்பு!



புதுக்கோட்டை மாவட்டம், ஒக்கூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் பயிலும் 10-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் வரவிருக்கும் பொதுத்தேர்வைச் சிறப்பாக எதிர்கொள்ளும் வகையில், அவர்களுக்குத் தேவையான கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற உள்ளது.

பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியப் பெருமக்களின் வழிகாட்டுதலின்படி, ஒக்கூர் முன்னாள் மாணவ-மாணவிகள் சார்பில் இந்த நற்பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது. 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்குத் தயாராகி வரும் மாணவர்களுக்குப் ஊக்கமளிக்கும் விதமாக பேனா, பென்சில் மற்றும் தலைவர்கள் பற்றிய புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட உள்ளன.

நிகழ்ச்சி விவரம்
நாள்: பிப்ரவரி 16, 2026
நேரம்: காலை 10.00 மணியளவில்
இடம்:ஒக்கூர் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகம்

இந்த விழாவில் ஒக்கூர் மற்றும் ஒக்கூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் முன்னாள் மாணவ-மாணவிகள், ஒக்கூர் ஊராட்சி பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் அனைவரும் திரளாகக் கலந்து கொண்டு மாணவர்களை வாழ்த்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments