மீமிசல் வீரமாகாளி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் ஒன்றியம் மீமிசல் பகுதியில் வீரமாகாளி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கும்பாபிஷேகத்தையொட்டி கணபதி ஹோமத்துடன் 6 கால யாக சாலை பூஜைகள் நடைபெற்றது.

தொடர்ந்து நேற்று காலை யாக சாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட புனித நீர் அடங்கிய கலசங்களை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து கொண்டு கோவிலை வலம் வந்தனர். பின்னர் வேத மந்திரங்கள் முழங்க வீரமாகாளி அம்மன் கோவில் மற்றும் பரிவார ெதய்வங்களில் மூலஸ்தான விமானங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். 

பின்னர் புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 

விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், பொதுமக்கள் செய்திருந்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments