புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் அரசு மேல்நிலை பள்ளியில் தமுமுக மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் 72-வது குடியரசு தினத்தை முன்னிட்டு இரத்ததான முகாம் மாவட்ட பொருப்புகுழு உறுப்பினர் மருத்துவ சேவை அணி மாவட்ட செயலர் MSK.சாலிஹ் தலைமையில் நடைபெற்றது.
தமுமுக மாநில செயலர் தொண்டி M.சாதிக்பாட்சா முகாமை தொடங்கி வைத்து தமுமுகவின் மருத்துவ சேவைகள் பற்றி உரை நிகழ்த்தினார். மாநில மீனவர் அணி செயலர் ஜெகதை செய்யது, தமுமுக-மமக பொறுப்பு குழு தலைவர் வழக்கறிஞர் சேக்தாவுது, டாக்டர் செந்தில் ராம், டாக்டர் ரேஸ்மா ரமா, டாக்டர் ராதகிருஸ்னன், டாக்டர் இம்ரான் கான் ஆகியோர் உரை நிகழ்த்தினர்.
கிளை தலைவர் செட்டி காஜாமைதின் வரவேற்புரை நிகழ்த்தினார். தமுமுக பொறுப்புகுழு உறுப்பினர்கள் ரபிக், பைசல் முன்னால் மாவட்ட நிர்வாகிகள் அபுசாலிஹ், அஜ்மல்கான், நவாஸ்கான், ஜமாத் தலைவர் KS.முகம்மது காசிம் மாணவர் அணி நசீம் கான், அக்ரம், ஜமான், முசரப், அபு சாதாம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 40-க்கும் மேற்பட்ட சகோதரர்கள் இரத்த தானம் செய்தனர்.
மேலும் அவசர தேவைக்கு இரத்த தானம் செய்ய பலரும் இரத்தபிரிவு கண்டறிந்தனர். இரத்த தானம் செய்த தமுமுக-மமகவினர் பாராட்டு சான்றிதல் வழங்கப்பட்டது. தமுமுக கிளை செயலர் மூசை நெய்னா முகம்மது நன்றி கூறினார்.
தகவல்:
தமுமுக ஊடக அணி
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments