அரசநகரிப்பட்டினம் தமுமுக மமக கிளையின் சார்பில் நடைப்பெற்ற ஆலோசனை கூட்டம்.. புதிய கிளை நிர்வாகிகள் தேர்வு.!!புதுக்கோட்டை (கிழக்கு)மாவட்டம் ஆவுடையார் கோவில் ஒன்றியம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி அரசநகரிப்பட்டினம் புதிய கிளை மற்றும் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கும் ஆலோசனை கூட்டம் 26.01.2021 அன்று அரசநகரிப்பட்டினத்தில் நடைபெற்றது.

மாவட்ட பொறுப்பு குழு தலைவர் B.சேக் தாவூதீன் தலைமை தாங்கினார் .மாநில செயலாளர் தொண்டி சாதிக் பாட்ஷா முன்னிலை வகித்தார் முன்னாள் மாவட்ட நிர்வாகிகள் அஜ்மல் கான் ,நவாஸ் கான் ரியாத் மண்டல நிர்வாகி செய்யது அபுதாஹிர் SMI மாவட்ட செயலாளர் கலந்தர் பாட்ஷா ஒன்றிய பொருப்பாளர் செய்யது அப்பாஸ் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

கீழ்கண்ட நபர்கள் கிளை நிர்வாகிகளாக ஏக மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்

கிளை தலைவர்
தமிமுன் அன்சாரி

தமுமுக செயலாளர் முகம்மது இசாம்

மமக செயலாளர் அகமது ஜாரிஸ்

பொருளாளர் 
ரிபாய்தீன்

இவர்களின் பணி சிறப்பாக அமைந்திட பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

தகவல்
தமுமுக ஊடக அணி
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments