மீமிசலில் கஞ்சா விற்ற 3 பேர் கைது.! ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 600 கிராம் கஞ்சா பறிமுதல்.!!மீமிசலில் கஞ்சா விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 1 கிலோ 600 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மீமிசல் பகுதியில் சிலர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் மீமிசல் இன்ஸ்பெக்டர் (பொ) சாமுவேல்ஞானம் தலைமையில் போலீசார், ஏம்பக்கோட்டை தர்மமுனீஸ்வரர் கோயில் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அப்பகுதியில் சந்தேகப்படுமாறு நின்று கொண்டிருந்த மீமிசலை சேர்ந்த மகேஷ் (49), ஏம்பக்கோட்டையை சேர்ந்த கோதண்டராமன் (56), பேராவூரணி அடுத்த நாடியத்தை சேர்ந்த ராமலிங்கம் (47) ஆகிய 3 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் 3 பேரும் கஞ்சாவை விற்பனை செய்வதற்காக அங்கு வந்தது தெரியவந்தது. 

இதையடுத்து 3 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 600 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments