எஸ்டிபிஐ கட்சி புதுகை மேற்கு மாவட்டம் சார்பில் சிறப்பு மாவட்ட செயற்குழு கூட்டம்எஸ்டிபிஐ கட்சி புதுக்கோட்டை மேற்கு மாவட்டம் சார்பில் சிறப்பு மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் ஸலாஹுதீன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட பொதுச் செயலாளர் ஜகுபர் அலி வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மாநில பொதுச் செயலாளர் அப்துல் ஹமீது, மாநில செயற்குழு உறுப்பினர் காசிநாததுரை கலந்து கொண்டனர். இதில் இரண்டு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது

2021 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்தும், தொகுதி வாரியாக நிர்வாகிகள், செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடத்த வேண்டும் என்றும், நபி(ஸல்)அவர்களை கல்யாணராமன் போன்ற பாஜக நிர்வாகிகள் அவதூறாக பேசுவதை கண்டித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் இக்கூட்டத்தின் இறுதியில் மாவட்ட செயலாளர் ஜியாவுதீன் நன்றியுரை வழங்கினர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments