ஆவுடையார் கோவில் யூனியன் அலுவலகம் முன்பாக விவசாய தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்.


புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் யூனியன் அலுவலகம் முன்பாக தமிழ்மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் ஜான் அவர்கள் தலைமை தாங்கினார்.

தோழர்கள் அமிர்தம். எஸ் இளங்கோவன். பழனிகுமார். சங்கரன் .
இன்னாசிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

இந்த ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கைகளாக- பட்டியலின வகுப்பினருக்கு அரசு கட்டிக்கொடுத்த வீடுகள் பல ஆண்டுகளாகி சேதமடைந்து விட்டதால் புதிய வீடுகள் கட்டிக் கொடுக்க வேண்டும். ரூபாய் 6 லட்சம் மதிப்பீட்டில் ஒவ்வொருவருக்கும் புதிய வீடு கட்ட வேண்டும், தேசிய ஊரக உறுதி திட்டத்தில்  100 நாள் வேலையை 200 நாளாக உயர்த்த வேண்டும். கூலி ரூபாய் 600 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். 

விவசாயத் தொழிலாளர் குடும்பங்களுக்கு கொரோனா கால நிவாரணமாக ரூபாய் 7500 வழங்க வேண்டும். மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டத் திருத்தங்களை நிபந்தனையின்றி உடனடியாக திரும்பப் பெற வேண்டும். திருப்புனவாசல் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் 12 ஆண்டுகளாக குடிநீர் இல்லாமல் மக்கள் தவிப்பதால் அந்த கிராமங்களுக்கு உடனடியாக குடிநீர் வழங்க வேண்டும் .போன்ற கோரிக்கைகளை முன்வைத்து ஆவுடையார்கோவில் யூனியன் அலுவலகம் முன்பாக மாநிலம் தழுவிய கோரிக்கைகள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் கணேசன் ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்து பேசினார். இந்த நிகழ்ச்சியில்நீர் வி. தொ,ச மாநில குழு உறுப்பினர் ஜெபமாலை பிச்சை. வி.சா ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் .சிபிஐ ஒன்றிய துணைச் செயலாளர் சேவுகப் பெருமாள் உள்பட 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments