மாற்று திறனாளிகள் கோட்டாச்சியர் அலுவலகம் முற்றுகை
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி மற்றும் இலுப்பூர் கோட்டாச்சியர் அலுவலகங்கள் முன்பாக தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அறந்தாங்கியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் எம்.தங்கவேல் தலைமை வகித்தார், எம். செல்வபான்டியன், ஜெகதீஸ் சரவணன், மரிய செல்வம், ரஞ்சன், அபிநயா உள்ளிட்ட மாற்று திறனாளிகள் முன்னிலை வகித்தனர். மாற்று திறனாளிகளுக்கு உதவி தொகை 3000 ஆயிரம் வழங்கவேண்டும். தனியார் துறை பணிகளில் மாற்று திறணாறிகளுக்கு குறைந்தபட்சம் 5 சதவீதம் வேலை வாய்ப்பு இடங்களை உத்தரவாதப் படுத்தி தமிழக அரசு சிறப்பு சட்டம் நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் எஸ்.கவிவர்மன், மனமேல்குடி ஒன்றிய செயலாளர் கரு, ராமநாதன், நகரச் செயலாளர் தங்கராஜ், வாலிபர் சங்க மாவட்ட தலைவர் கர்ணா உள்ளிட்டோர் பேசினார்கள்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments