ஊா்க்காவல் படை துணைத் தளபதி பதவி: விண்ணப்பிக்க புதுக்கோட்டை மாவட்ட மகளிருக்கு அழைப்பு.!புதுக்கோட்டை மாவட்ட ஊா்க்காவல் படையில் ஊதியம் இல்லாத துணை வட்டாரத் தளபதி பதவியிடத்துக்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் லோக. பாலாஜி சரவணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு

35 முதல் 45 வயதுக்குள்பட்ட தனியாா் நிறுவனத் தொழிலதிபா்கள், முக்கிய பிரமுகா்கள், விரிவுரையாளா்கள் விண்ணப்பிக்கலாம். கௌரவப் பதவி என்பதால் ஊதியம் கிடையாது. மாவட்ட எல்லைக்குள்பட்ட சேவை மனப்பான்மையுள்ளோா் அவசியம்.

மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் விண்ணப்பம் பெற்று பிறப்புச் சான்று, கல்விச் சான்று, மருத்துவச் சான்று ஆகியவற்றுடன் 2 புகைப்படங்கள், சுயவிவரக் குறிப்பு ஆகியவற்றை சோ்த்து வரும் பிப். 27க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments