பிளஸ்-2 பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு முழு விவரம்..!தமிழகத்தில் பிளஸ்-2 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு 03.05.2021 அன்று தொடங்கி 21.05.2021 அன்று முடிவடையும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
மே 3-ந்தேதி - மொழிப்பாடம்
மே 5-ந்தேதி- ஆங்கிலம்
மே 7-ந்தேதி - கணினி அறிவியல்
மே 11-ந்தேதி - இயற்பியல், பொருளாதாரம்
மே 17-ந்தேதி- கணிதம், விலங்கியல்
மே 19-ந்தேதி- உயிரியல், வரலாறு
மே 21-ந்தேதி- வேதியியல், கணக்குப் பதிவியல் உள்ளிட்ட தேர்வுகள்

தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 8 லட்சம் மாணவ, மாணவிகள் பொதுத்தேர்வை எழுதுகின்றனர்.

காலை 10 மணி முதல் காலை 10.10 மணி வரை மாணவர்கள் வினாத்தாளை படிக்க அனுமதிக்கப்படுவர்.

காலை 10.10 மணி முதல் காலை 10.15 மணி வரை மாணவர்களின் விவரங்கள் பரிசோதிக்கப்படும்.

காலை 10.15 மணி முதல் பிற்பகல் 1.15 மணி வரை  பொதுத்தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments