மணமேல்குடியில் மீனவர் பகுதி உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு பயிற்சி வகுப்புகள்.!கடலோர மீனவர் பகுதி உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு மனித உரிமை மேம்பாடு மற்றும் ஆராய்ச்சி அமைப்பு சார்பில் ஊராட்சி நிர்வாகம் குறித்து முறையான பயிற்சி அளிக்கப்பட்டு அவர்களுக்கு புத்தகம் வழங்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த  கடலோர பகுதி மீனவர் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு மனித உரிமை மேம்பாடு மற்றும் ஆராய்ச்சி அமைப்பு மற்றும் கிராம கல்வி மற்றும் பொருளாதார மேம்பாட்டு நிறுவனம் சார்பில்  மணமேல்குடி தனியார் மண்டபத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது.

அந்தப் பயிற்சியில் அந்தந்த ஊராட்சியில் எவ்வாறு செயல்பட வேண்டும்.மீனவர்களுக்கு உண்டான பிரச்சனைகளை திறம்பட எவ்வாறு தீர்ப்பது போன்ற பயிற்சிகளும் ஆறு தலைப்புகளில் அவர்களுக்கு உள்ளாட்சி என்ற புத்தகங்களும் வழங்கப்பட்டது
 

அந்தப் புத்தகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் உரிமைகள் மற்றும் கடமைகள் கிராமசபை வலிமைப்படுத்துதல் கிராம வளர்ச்சி திட்டம் தயாரிக்கும் முறைகள் நிதி வளம் மற்றும் கணக்குகளை பராமரிக்கும் முறைகள் அரசு திட்டங்கள் மற்றும் அணுகுமுறைகள் உள்ளாட்சி குழுக்கள் என ஆறு தலைப்புகளில் அவர்களுக்கு புத்தகம்  வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் 50-க்கும் மேற்பட்ட உள்ளாட்சி மீனவ பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.இந்த நிகழ்ச்சியினை கிராம கல்வி மற்றும் பொருளாதார மேம்பாட்டு  நிறுவன இயக்குனர் ராஜேந்திரன் மற்றும் கிராம பெண்கள் மேம்பாட்டு அமைப்பு மற்றும் மணமேல்குடி மக்கள் சமூக சேவை மையம்  மற்றும் ரொஸ் அமைப்பு  இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments