உங்கள் வேலையை எளிதாக்க வாட்ஸ்அப் வெப் ஷார்ட்கட்ஸ்களை தெரிந்துகொள்ளுங்கள்
வாட்ஸ்அப் செயலியை உலகம் முழுவதும் உள்ள மக்கள் பரவலாக பயன்படுத்துகின்றனர். வாட்ஸ்அப் நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு அம்சங்களும் மக்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கிறது. இந்த நிலையில் தற்போது வீட்டில் இருந்து வேலை பார்க்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், வாட்ஸ்அப் வெப் பேருதவி செய்து வருகிறது என்றே கூறலாம்.

ஒரு வாட்ஸ்அப் வெப் கணக்கில் உள்நுழைய, பயனர்கள் தங்களது லேப்டாப் அல்லது கணினியில் வாட்ஸ்அப்பை வெப் லிங்கை திறந்து, தங்கள் தொலைபேசியின் கேமராவைப் பயன்படுத்தி திரையில் QR குறியீட்டை ஸ்கேன் செய்ய வேண்டும். தற்போது யூசர்கள் தங்கள் முகம் ஐடி அல்லது கைரேகையை பயன்படுத்தி திறக்க அனுமதிக்கும் அம்சத்தையும் வாட்ஸ்அப் உருவாக்கியுள்ளது

அப்படி வாட்ஸ்அப் வெப் அதிகம் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் பயனுள்ள கீபோர்ட் ஷார்ட்கட்ஸ்-ஐ தெரிந்து கொள்வது அவசியம். இந்த ஷார்ட்கட்ஸ் ஆனது உங்கள் முக்கியமான வேலையை மிகவும் சுலபமாக்கி விடுகிறது.வாட்ஸ்அப் வெப் கீபோர்ட் ஷார்ட்கட்ஸ் குறித்து இங்கு விரிவாக தெரிந்து கொள்வோம்.,

* ஒரு சொல் அல்லது சொற்றொடரைத் தேட, Ctrl + F என்பதை அழுத்தவும்

* புதிய அரட்டை/ சாட்-ஐ (chat) தொடங்க, Ctrl + N என்பதை அழுத்தவும்* ஈமோஜி (emoji) பொத்தாங்களை திறக்க - Shift + Tab என்பதை அழுத்தவும்

* புதிய குழுவைத் (group) தொடங்க, Ctrl + Shift + N என்பதை அழுத்தவும்

* உங்கள் முந்தைய சாட்டிற்கு செல்ல, Ctrl + Shift + என்பதை அழுத்தவும்.

* அடுத்த சாட்டிற்கு செல்ல, Ctrl + Shift + என்பதை அழுத்தவும்

* Alt + Ctrl + e ஆனது ஒரு சாட்-ஐ ஆர்ச்சிவ் செய்ய (Archive Chat) அனுமதிக்கும்.

* Alt + Ctrl + M வசதியானது ம்யூட் செய்ய (Mute) அனுமதிக்கும்.

* வாசிப்பு நிலையை (read status) மாற்ற - Ctrl + Shift + U என்பதை அழுத்தவும்.


* சாட்-ஐ நீக்க Ctrl + Del என்பதை அழுத்தவும்.

* புரொபைல்-ஐ திறக்க Ctrl + P என்பதை அழுத்தவும்.

பான்ட் அளவுகளை மாற்ற :

* பான்ட் (font size) அளவை அதிகரிக்க, Ctrl + = ஐ அழுத்தவும்

* பான்ட் அளவைக் குறைக்க, Ctrl + ஐ அழுத்தவும்

* இயல்புநிலை பான்ட்-க்கு செல்ல, Ctrl + 0 ஐ அழுத்தவும்

டெக்ஸ்ட்-ன் வடிவமைப்பை மாற்ற :

* டெக்ஸ்ட்-டை (text) போல்டாக மாற்ற * text * என்பதை அழுத்தவும்.

* டெக்ஸ்ட்-டை இட்டாலிக் ஸ்டைலில் மாற்ற _text_ என்பதை அழுத்தவும்.

* ஒரு டெக்ஸ்ட் மீதான ஸ்ட்ரை கோட்டிற்கு ~ text ~ என்பதை அழுத்தவும்.

மோனோஸ்பேஸ் எழுத்துருவில் ‘‘‘உரை‘‘‘ பயன்படுத்தவும்.

நீங்கள் சாட்டில் இருக்கும் நேரத்தில் Shift+Tab என்பதை அழுத்துவதன் மூலம் ஈமோஜிகள், ஸ்டிக்கர்கள் மற்றும் GIF வசதிகளை பெறலாம்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments