தமிழகத்தின் 2-ஆவது அரசு பல் மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல்
புதுக்கோட்டை மாவட்டத்தில் மாநிலத்திலேயே இரண்டாவது அரசு பல் மருத்துவக் கல்லூரிக்கான கட்டுமானப் பணிகளுக்கு மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் சி. விஜயபாஸ்கா் வியாழக்கிழமை அடிக்கல் நாட்டிவைத்தாா்.

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ரூ. 63.41 கோடி மதிப்பில், 10.14 ஏக்கா் பரப்பளவில் இந்த அரசு பல் மருத்துவக் கல்லூரி கட்டப்படவுள்ளது.

தரைத்தளம் மற்றும் முதல் தளத்தில் அமையவுள்ள இந்தக் கட்டடத்தில் முதல்வா் அறை, மருத்துவ அறை, பணியாளா் மற்றும் ஆசிரியா் அறை, மாணவா் விடுதி, கூட்ட அரங்கு, வகுப்பறைகள், ஆய்வகம் அமைக்கப்படவுள்ளன.

நிகழ்ச்சியில், ஆட்சியா் பி. உமா மகேஸ்வரி, அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் மு. பூவதி, அரசு பல் மருத்துவக் கல்லூரி முதல்வா் பிரேம்குமாா், பொதுப்பணித் துறை (மருத்துவப் பணிகள்) செயற்பொறியாளா் நித்யானந்தன், முன்னாள் எம்எல்ஏக்கள் காா்த்திக் தொண்டைமான், ஆா். நெடுஞ்செழியன், வேளாண் விற்பனைக் குழுத் தலைவா் க. பாஸ்கா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

 
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments