இந்தியாவில் சமூக வளைத்தளங்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை உங்களுக்கு தெரியுமா ?




இந்தியாவில் வாட்ஸப்பை 53 கோடி பேர், யூடியூப்பை 44.8 கோடி பேர் ,பேஸ்புக்கை 41 கோடி பேர், இன்ஸடாகிராம் 21கோடி பேர், ட்விட்டர் 1.75  கோடி பேர், பயன்படுத்துகிறார்கள் என்ற புள்ளிவிபரத்துடன், சமூக வலைத்தளங்கள், டிஜிட்டல் மீடியா மற்றும் ஓடிடி தளங்களுக்கான புதிய விதிமுறைகளையும், பாதுகாப்பு பொறிமுறைகளையும் மத்திய அரசு வெளியிட்டிருக்கிறது.

சமூக இணைய தளம் மற்றும் டிஜிட்டல் மீடியா மற்றும் ஓடிடி தளம் தொடர்பாக இணக்கமான மேற்பார்வையிடும் பொறிமுறையை பெறுவதற்காக,  மத்திய எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் தகவல் தொழில்நுட்ப விதிமுறைகள் 2021-ஐ  உறுதி செய்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் “இந்த விதிகளின் இரண்டாம் பாகம்  எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்ப  அமைச்சகத்தால்  நிர்வகிக்கப்படும்.டிஜிட்டல் மீடியா தொடர்பான நெறிமுறைகள், நடைமுறை மற்றும் பாதுகாப்பு தொடர்பான 3ம் பாகம்  தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை  அமைச்சகத்தால் நிர்வகிக்கப்படும். புதிய தகவல் தொழில்நுட்ப விதிமுறைகள் படி,  இந்தியாவில் தொழில் செய்ய சமூக ஊடக தளங்கள் வரவேற்கப்படுகின்றன.  ஆனால், அந்த நிறுவனங்கள், இந்திய அரசியலமைப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். கேள்விகள் எழுப்பவும், விமர்சிக்கவும், சமூக ஊடக தளங்களை பயன்படுத்தலாம்.சமூக ஊடக தளங்கள் சாதாரண பயனர்களுக்கு அதிகாரம் அளித்துள்ளன, ஆனால் அதன் தவறான பயன்பாடு மற்றும் துஷ்பிரயோகத்திற்கு  எதிராக அவர்கள் பொறுப்பேற்க வேண்டும்.

டிஜிட்டல் ஊடகம் மற்றும் ஓடிடி பற்றிய விதிகள் சுய கட்டுப்பாட்டு முறையில் கவனம் செலுத்துகின்றன. இதன் மூலம் வலுவான குறைதீர்ப்பு வழிமுறை வழங்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பத்திரிக்கை மற்றும் படைப்பாற்றல் சுதந்திரம் நிலைநிறுத்தப்படுகிறது.தற்போது முன்மொழியப்பட்ட விதிமுறைகள் முற்போக்கானது, தாராளமயமானது மற்றும் சம காலத்தைச் சேர்ந்தது.படைப்பாற்றல் மற்றும் பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரத்தைத் தடுப்பது குறித்த எந்தவொரு தவறான புரிதலையும் நீக்கி, மக்களின் மாறுபட்ட கவலைகளை இது தீர்க்க முற்படுகிறது

அதிகளவிலான செல்போன் பயன்பாடு, இன்டர்நெட் பயன்பாடு ஆகியவை காரணமாக இந்தியாவில் சமூக ஊடகங்கள் விரிவடைந்துள்ளன.

வாட்ஸ்அப் பயன்படுத்துவோர் : 53 கோடி

யூ ட்யூப் பயன்படுத்துவோர் :  44.8 கோடி

பேஸ்புக் பயன்படுத்துவோர் : 41 கோடி

இன்ஸ்டாகிராம் பயன்படுத்துவோர்: 21 கோடி

ட்விட்டர் பயன்படுத்துவோர் : 1.75 கோடி

 இந்த சமூக இணையதளங்கள் மூலம் இந்திய மக்கள் தங்கள் படைப்பாற்றலை வெளிப்படுத்துகின்றனர், கேள்வி எழுப்புகின்றனர், தகவல் அறிகின்றனர், தங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பகிர்ந்து கொள்கின்றனர், அரசையும் அதன் செயல்பாடுகளையும்கூட விமர்சிக்கின்றனர்.ஜனநாயக முறைப்படி ஒவ்வொரு இந்தியரின் உரிமையையும் மத்திய அரசு மதிக்கிறது.  இந்தியா உலகின் மிகப் பெரிய திறந்தவெளி இன்டர்நெட் சமூகமாக உள்ளது.  அதனால் சமூக ஊடக நிறுவனங்கள் இந்தியாவில் இயங்க வரவேற்கப்படுகின்றன.ஆனால், அவர்கள் இந்திய அரசியலமைப்பு சட்ட விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்” என தெரிவித்திருக்கிறது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments