சிமி வழக்கு: ஒரு குற்றமும் செய்யாமல் 20 ஆண்டுகள் சிறையில் கழித்த 122 பேர் விடுதலை.!சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (UAPA) கீழ் கைது செய்யப்பட்ட 122 பேரை குஜராத் நீதிமன்றம் விடுவித்துள்ளதாக தி இந்து  செய்தி வெளியிட்டுள்ளது.

குஜராத் மாநிலத்தில், கடந்த 2001-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், இந்திய அரசால் தடை செய்யப்பட்ட அமைப்பான இந்திய மாணவர்களின் இஸ்லாமிய இயக்கம் (சிமி) நடத்திய கருத்தரங்கில் கலந்துக் கொண்டதாக குஜராத், தமிழகம், மேற்கு வங்கம், மத்திய பிரதேசம், கர்நாடகம், உத்தர பிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 127 பேரை சூரத் காவல்துறை கைது செய்தது.

இவர்கள்மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் உள்ள பல்வேறு பிரிவுகளில் (தடை செய்யப்பட்ட அமைப்பில் உறுப்பினராக இருந்தது, கருத்தரங்குகள் நடத்தி இயக்கத்தை ஊக்குவித்தது, இயக்கத்தின் நடவடிக்கையை விரிவுப்படுத்தியது) வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

நன்றி: அரண்செய்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments