புதுக்கோட்டை மாவட்டத்தில் 80 வயதிற்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் தபால் ஓட்டு போட விண்ணப்பிக்கலாம்! மாவட்ட ஆட்சியர் தகவல்!!



தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் 80 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள், மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் மற்றும் கொரோனா தொற்று மூலம் பாதிக்கப்பட்ட வாக்காளர்களுக்கு தபால் மூலம் வாக்களிக்க வழி செய்யப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தை பொறுத்தவரையில், 80 வயதிற்கு மேற்பட்ட 25 ஆயிரத்து 630 வாக்காளர்களும், 10 ஆயிரத்து 520 மாற்றுத்திறனாளி வாக்காளர்களும் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். 

தபால் வாக்கிற்கான படிவம் அனைத்து வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் மூலம், 80 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள், மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் மற்றும் கொரோனா தொற்று மூலம் பாதிக்கப்பட்ட வாக்காளர்களின் வீட்டிற்கு சென்று வழங்கப்படுகிறது. 

இந்த வாய்ப்பினை அவர்கள் தவறாது பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான உமாமகேஸ்வரி கேட்டுக் கொண்டுள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments