டிஜிட்டல் வாக்காளர்கள் அடையாள அட்டை பெறுவது எப்படி? உங்கள் சந்தேகங்களுக்கான விளக்கங்கள்..




தேசிய வாக்காளர் தினமான இன்று e-EPIC என்ற மின்னணு தேர்தல் புகைப்பட அடையாள அட்டை (Electronic Electoral Photo Identity Card) திட்டத்தை இந்திய தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது.
டிஜிட்டல் வாக்காளர்கள் அடையாள அட்டை பெறுவது எப்படி? உங்கள் சந்தேகங்களுக்கான விளக்கங்கள்..கோப்புப்படம்.

தேசிய வாக்காளர் தினமான இன்று e-EPIC என்ற மின்னணு தேர்தல் புகைப்பட அடையாள அட்டை (Electronic Electoral Photo Identity Card) திட்டத்தை இந்திய தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் வரவிருக்கும் ஐந்து மாநிலத் தேர்தல்களுக்கு வாக்காளர்கள் இந்த புதிய டிஜிட்டல் விருப்பத்தைப் பெறலாம். இதனை உங்கள் தொலைபேசி அல்லது கணினி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

டிஜிட்டல் வாக்காளர்கள் அடையாள அட்டையைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் : 

e-EPIC என்றால் என்ன?

e-EPIC என்பது EPIC-ன் பாதுகாப்பான போர்ட்டபிள் ஆவண வடிவமைப்பு (PDF) பதிப்பாகும். இது மொபைல் அல்லது கணினியில் இருந்து பதிவிறக்கம் செய்து செல்ப் பிரின்டிங் செய்து கொள்ளலாம். ஒரு வாக்காளர் தனது வாக்காளர் அடையாள அட்டையை மொபைலில் சேமித்து வைத்துக்கொள்ளலாம். அதை டிஜி லாக்கரில் PDF ஆகவும் பதிவேற்றலாம். மேலும் அதை அச்சிட்டு லேமினேட் செய்துகொள்ளலாம். இது தற்போது வழங்கப்படும் பி.சி.வி இபிஐசிக்கு கூடுதல் அம்சமாக கருதப்படுகிறது.

e-EPIC-ஐ எவ்வாறு பதிவிறக்கம் செய்வது?

வாக்காளர் போர்ட்டல் அல்லது வாக்காளர் ஹெல்ப்லைன் மொபைல் செயலி அல்லது NVSP ஆகியவற்றிலிருந்து e-EPIC -ஐ பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.



Voter Helpline Mobile App Link:



e-EPIC-க்கு தகுதியானவர் யார்?

செல்லுபடியாகும் EPIC எண்ணைக் கொண்ட அனைத்து பொது வாக்காளர்களும் e-EPIC-ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கூடுதலாக சிறப்பு சுருக்கம் திருத்தம் 2021-ன் படி, 2020-ம் ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் விண்ணப்பித்தவர்கள் மற்றும் விண்ணப்பிக்கும் போது வழங்கப்பட்ட மொபைல் எண் தனித்துவமானது என பதிவு செய்யப்பட்ட அனைத்து புதிய வாக்காளர்களும் ஒரு எஸ்எம்எஸ் பெறுவார்கள். அவர்கள் இந்த ஆண்டு ஜனவரி 25 மற்றும் 31-க்கு இடையில் e-EPIC-ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பிற பொது வாக்காளர்கள் பிப்ரவரி 1ம் தேதி முதல் e-EPIC-ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

EPIC-ஐ இழந்த நபர்கள், e-EPIC ஐ எவ்வாறு பதிவிறக்கம் செய்யலாம்?

உங்கள் பெயரை http://voterportal.eci.gov.in/ அல்லது http://electoralsearch.in/ என்ற இணையதளங்களில் இருக்கும் தேர்தல் பட்டியலில் தேடலாம். அதில் கொடுக்கப்பட்டிருக்கும் உங்கள் EPIC எண்ணை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் நீங்கள் எளிதில் e-EPIC ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

என்னிடம் EPIC எண் இல்லை, ஆனால் என்னிடம் படிவம் -6 குறிப்பு எண் உள்ளது, நான் e-EPIC ஐ பதிவிறக்கம் செய்யலாமா?

கட்டாயம் பதிவிறக்கம் செய்யலாம். மின் படிவத்தைப் பதிவிறக்க படிவ குறிப்பு எண்ணைப் பயன்படுத்தலாம்.

e-EPIC இன் பைல் ஃபார்மேட் என்ன?

சிறிய ஆவண வடிவத்தில் (PDF) நீங்கள் e-EPIC ஐ பதிவிறக்கம் செய்யலாம். மேலும் இந்த பைலின் அளவு 250KB ஆகும்.

வாக்குச் சாவடியில் அடையாளச் சான்றாகக் காட்ட ஒருவர் e-EPIC ஐ அச்சிடலாமா?

வாக்குச் சாவடியில் அடையாளத்தின் சான்றாகக் காட்ட நீங்கள் e-EPIC ஐ பதிவிறக்கம் செய்து ப்ரின்டவுட் செய்து கொள்ளலாம்.

e-EPIC பதிவிறக்கம் செய்வதற்கான வழிமுறைகள் என்ன?

http://voterportal.eci.gov.in/ அல்லது https://nvsp.in/ அல்லது வாக்காளர் ஹெல்ப்லைன் மொபைல் செயலி மூலம் e-EPIC ஐ பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள் பின்வருமாறு:

* வாக்காளர் போர்ட்டலில் முதலில் ரெஜிஸ்டர் செய்து பிறகு லாகின் செய்யவேண்டும்.

* மெனு நேவிகேஷனில் இருந்து டவுன்லோட் e-EPIC ஐ என்பதை  கிளிக் செய்ய வேண்டும்.

* EPIC எண் அல்லது படிவ குறிப்பு எண்ணை உள்ளிட வேண்டும்.

* பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணில் அனுப்பப்பட்ட OTP உடன் சரிபார்க்கவும்.

* Download e-EPIC ஐக் கிளிக் செய்ய வேண்டும்.

* Eroll இல் மொபைல் எண் பதிவு செய்யப்படவில்லை என்றால், KYC ஐ முடிக்க e-KYC ஐக் கிளிக் செய்ய வேண்டும்.

* ஃபேஸ் லைவ்னெஸ் சரிபார்ப்பை அனுப்பவும்

* KYC ஐ நிறைவு செய்ய உங்கள் மொபைல் எண்ணைப் புதுப்பிக்கவும்

* பின்னர் உங்கள் e-EPIC ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

eKYC என்றால் என்ன?

eKYC என்பது சீரற்ற உடல் அசைவுகளுடன் எடுக்கப்படும் லைவ்லினெஸ் சோதனை ஆகும். இதில், ரியல் டைம் இமேஜ் கேப்ச்சர் செய்வதற்காக ஒரு நபரின் நேரடி புகைப்படம் தேவைப்படுகிறது. அதாவது நீங்கள் உங்கள் KYC-ஐ பூர்த்தி செய்ய உங்கள் நேரடி தோற்றம் படமாக பிடிக்கப்படும். இந்த புகைப்படம் ஏற்கனவே EPIC தரவில் பயன்படுத்தப்பட்ட படத்துடன் ஒப்பிட்டு பார்க்கப்படும்.

eKYC தோல்வியுற்றால் என்ன செய்வது?

புகைப்பட ஐடி ஆதாரத்துடன் ERO அலுவலகத்தைப் பார்வையிட்டு உங்கள் மொபைல் எண்ணைப் புதுப்பிக்கவும்.

eKYC க்கு என்ன தேவை?

இதற்கு கேமரா வசதி கொண்ட மொபைல் ஃபோன் அல்லது வெப்கேமுடன் லேப்டாப் அல்லது டெஸ்க்டாப் தேவை.

எனது மொபைல் எண் ERoll இல் பதிவு செய்யப்படவில்லை, நான் e-EPIC ஐ பதிவிறக்கம் செய்யலாமா?

கட்டாயமாக செய்யலாம். உங்கள் மொபைல் எண்ணைப் புதுப்பிக்க நீங்கள் eKYC வழிமுறைகளை பூர்த்தி செய்தால் போதும்.

ERoll -ல் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணை நான் பயன்படுத்தவில்லை, எனது மொபைல் எண்ணை புதுப்பிக்க முடியுமா?

ஆம், eKYC ஐ முடிப்பதன் மூலம் உங்கள் புதிய மொபைல் எண்ணை புதுப்பிக்கலாம்.

எனது ஸ்மார்ட்போனில் e-EPIC பதிவிறக்கம் செய்யலாமா?

ஆம், வாக்காளர் ஹெல்ப்லைன் மொபைல் பயன்பாட்டைப் பயன்படுத்தி e-EPIC பதிவிறக்கம் செய்யலாம்.

எனது குடும்ப உறுப்பினர்கள் ஒரே மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளனர், நான் eEPIC ஐ எவ்வாறு பதிவிறக்குவது?

ஒவ்வொரு உறுப்பினரும் தனித்தனி மொபைல் எண்ணுடன் eKYC செய்யலாம். eKYC வழிமுறைகளை நீங்கள் முடித்த பிறகு e-EPIC ஐ பதிவிறக்கம் செய்யலாம்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments