வாட்ஸ்அப்பின் அசத்தலான புதிய அப்டேட்..! அதிகரிக்கும் எதிர்பார்ப்பு




வாட்ஸ்ஆப்- லிருந்து இன்ஸ்டாகிராம் ரீல்களை பார்க்கும் வசதியை இந்த ஆண்டு இறுதிக்குள் பேஸ்புக் நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்ஆப் செயலிகளின் நிறுவனமான பேஸ்புக், தங்கள் நிறுவனத்தின் செயலிகளை வாடிக்கையாளர்கள் எளிமையாக பயன்படுத்தும் வகையில் புதிய அப்டேட்களை செய்து வருகிறது. அந்தவகையில், வாட்ஸ் ஆப் வழியாக இன்ஸ்டாகிராம் ரீல்களை பார்க்கும் வசதியை அந்நிறுவனம் உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வாட்ஸ்ஆப் மூலம் எப்படி அந்த ஆப்சன் செயல்படும் என்ற கூடுதல் தகவல்கள் வெளியாகவில்லை என்றாலும், இந்த ஆண்டு இறுதிக்குள் வாட்ஸ்ஆப் செயலியில் புதிய அம்சம் பயன்பாட்டுக்கு வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இதன்மூலம் பேஸ்புக் நிறுவனத்தின் அனைத்து செயலிகளும் ஒன்றோடொன்று இணைக்கப்படுவது உறுதியாகியுள்ளது. தற்போது வாட்ஸ்ஆப் வழியாக பேஸ்புக்கில் மெசேஜ் - ஐ பகிரும் ஆப்சன் நடைமுறையில் உள்ளது. இன்ஸ்டாகிராம் செயலியின் வழியாக பேஸ்புக் நண்பர்களுடன் உரையாடும் அம்சத்தை அண்மையில் பேஸ்புக் அறிமுகப்படுத்தியது. எதிர்காலத்தில் பேஸ்புக் ரீல்களை வாட்ஸ் ஆப் மூலம் பயன்படுத்தும் ஆப்சனை கொண்டுவந்தாலும் வியப்பதற்கில்லை என டெக் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். வாட்ஸ்ஆப்பில் என்ட் டூ என்ட் என்கிரிப்சன் இருப்பதால், தனிப்பட்ட உரையாடல்கள் மற்றும் தொடர்புகள் பொதுவெளியில் வெளியாக வாய்ப்புகள் இல்லை எனவும், தனிநபர் பாதுகாப்பு உத்தரவாதம் இருக்கும் என்று திட்டவட்டமாக பேஸ்புக் தெரிவித்திருந்தது.

இந்தநேரத்தில், ஒரு செயலியுடன் மற்றொரு செயலியை எளிதாக தொடர்பு கொள்ளும்போது தனிநபர் தொடர்புகள் பாதுகாப்பு இருக்குமா? என்ற கேள்வியையும் தொழில்நுட்பு வல்லுநர்கள் எழுப்பியுள்ளனர். இதனிடையே, வாட்ஸ்ஆப் செயலியில் புதிய அப்டேட்டை மே 15ம் தேதிக்குள் வாடிக்கையாளர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், வாட்ஸ் ஆப் செயலியின் பல்வேறு புதிய அம்சங்களை பயன்படுத்த முடியாது என அந்நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வாட்ஸ்ஆப் செயலியின் புதிய அப்டேட், தனிநபர் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக சர்ச்சை எழுந்த நிலையில், தங்களது முடிவில் இருந்து பின்வாங்கப்போவதில்லை என திட்டவட்டமாக கூறியுள்ளது.

அப்டேட் செய்யாதவர்கள், வாட்ஸ்ஆப் செயலி மூலம் செய்திகளை அனுப்ப முடியாது மற்றும் வந்த செய்திகளை படிக்கவும் முடியாது எனக் கூறியுள்ளது. குறிப்பிட்ட சில காலங்களுக்கு மட்டுமே வாட்ஸ் அழைப்புகள் மற்றும் நோட்டிபிகேசன் வரும் என்றும் அந்த நிறுவனம் கூறியுள்ளது. அப்டேட் செய்யாமல் வாட்ஸ் ஆப் கணக்கை டெலிட் செய்துவிட்டால், வாட்ஸ்ஆப் குழுக்கள், தொடர்புகள் மற்றும் உரையாடல்கள் என எதையும் திரும்பப்பெற முடியாது என்றும் வாட்ஸ் ஆப் தெரிவித்துள்ளது. இதனால் யூசர்கள் என்ன செய்வதென தெரியாமல் உள்ளனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments