வேட்பாளரை மாற்றாவிட்டால் நீதி கேட்டு பிரச்சாரம் : அறந்தாங்கி அதிமுக எம்எல்ஏ ரத்தினசபாபதி அறிவிப்பு


புதுக்கோட்டை மாவட்டம் அறந் தாங்கி தொகுதி அதிமுக எம்எல்ஏ இ.ஏ.ரத்தினசபாபதி நேற்று செய்தி யாளர்களிடம் கூறியது:
அதிமுகவை தற்போது நி நிர்வகித்து வரும் நிர்வாகிகள் சர்வாதிகாரிகளைப்போல செயல்பட்டு வருகின்றனர்.


புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளுக்கும் அதிமுக சார்பில் நிறுத்தப்பட்டுள்ள வேட் பாளர்களை உள்ளூர் கட்சியினரே ஏற்றுக்கொள்ளவில்லை.

தேர்தல் பிரச்சாரத்துக்காக அறந்தாங்கி வந்த தமிழக முதல்வர் பழனிசாமி, என்னிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, நான் கேட்ட எந்த கேள்விக்கும் முறையாக அவர் பதில் சொல்லவில்லை.

அமமுகவுக்கு சென்று ஆதரவு தெரிவித்த சட்டப் பேரவை உறுப்பினர்கள் யாருக்கும் இந்தமுறை வாய்ப்பளிக்க வில்லை.

வேட்புமனு தாக்கல் முடிய இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், அறந்தாங்கி உட்பட குளறுபடியான தொகுதிகளில் அறிவித்துள்ள வேட்பாளர்களை மாற்றிவிட்டு, மக்கள் ஆதரவு பெற்ற வேட்பாளர்களை கட்சித் தலைமை அறிவிக்க வேண்டும். இல்லாவிட்டால், விராலிமலை முருகன் கோயிலில் தொடங்கி, கோடியக்கரை வரை பொது மக்களிடம் நீதி கேட்டு வாகனப் பிரச்சாரம் செய்ய உள்ளேன்.


புதுக்கோட்டை மாவட்டத்தி லுள்ள 6 தொகுதிகளிலும் இந்த தேர்தலில் அதிமுக தோல்வி யுற்றால், அதற்கு அமைச்சர் சி.விஜயபாஸ்கரே முழுக் கார ணம் என்றார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments