எஸ்டிபிஐ கட்சிக்கும் குக்கர் சின்னம்!




அமமுக கூட்டணியில் போட்டியிடும் எஸ்டிபிஐ கட்சிக்கு தேர்தல் ஆணையம் குக்கர் சின்னத்தை ஒதுக்கியிருக்கிறது.

தமிழக சட்டமன்றத் தேர்தலில், எஸ்.டி.பி.ஐ. கட்சி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணியில் இணைந்து, ஆலந்தூர், ஆம்பூர், பாளையங்கோட்டை, திருவாரூர், மதுரை மத்தி, திருச்சி மேற்கு ஆகிய 6 தொகுதிகளில் போட்டியிடுகிறது. மேலும், புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலிலும் அமமுக கூட்டணியில் இணைந்து நெல்லிதோப்பு, அரியாங்குப்பம், காரைக்கால் வடக்கு, மாஹே ஆகிய 4 தொகுதிகளில் எஸ்.டி.பி.ஐ. கட்சி போட்டியிடுகிறது.

இந்த 10 தொகுதிகளிலும் எஸ்.டி.பி.ஐ. கட்சி வேட்பாளர்கள் தாக்கல் செய்திருந்த வேட்பு மனுக்கள் தேர்தல் கமிஷனால் ஏற்கப்பட்டு, இன்று அவர்களுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

திமுக, அதிமுக போன்ற கட்சிகள் தலைமையிலான கூட்டணியில் உதயசூரியன், இரட்டை இலை சின்னத்தில் கட்சிகள் போட்டியிடுகின்றன. அதேபோல அமமுக தலைமையிலான கூட்டணியில் அமமுகவின் குக்கர் சின்னம் பரவலாக சென்று சேர்ந்திருப்பந்தால் அந்த சின்னத்திலேயே எஸ்டிபிஐ கட்சியும் போட்டியிடுகிறது.

அமமுக கூட்டணியில் இருக்கும் தேமுதிக முரசு சின்னத்திலும், ஓவைசி கட்சி பட்டம் சின்னத்திலும் போட்டியிடுகின்றன என்பது குறிப்பிடத் தக்கது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments