புதுக்கோட்டையில் வாக்காளர் விழிப்புணர்வு வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர்!



புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் நகராட்சி சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் உமாமகேஸ்வரி கொடியசைத்து நேற்று தொடங்கி வைத்தார்.

இந்த வாகனத்தில் பெரிய அளவிலான மாதிரி வாக்குப்பதிவு எந்திரம் வைக்கப்பட்டுள்ளது. விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டுபிரசுரங்களை பஸ் நிலையத்தில் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு கலெக்டர் உமாமகேஸ்வரி வழங்கினார். 

அப்போது அவர் கூறுகையில், புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தலை நடத்தும் வகையில் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. 

இதேபோன்று தேர்தலில் பொதுமக்கள் 100 சதவீதம் வாக்களிக்கும் வகையில் பல்வேறு வாக்காளர் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வாக்காளர்கள் அனைவரும் வருகிற 6-ந் தேதி நடைபெறும் தேர்தலில் தவறாமல் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்றார். 

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன், தேர்தல் நடத்தும் அலுவலர் டெய்சிகுமார், நகராட்சி பொறியாளர் ஜீவாசுப்பிரமணியன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.இதேபோல் வாக்காளர் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments