அரசு விதிமுறைகள் மீறி நடத்தப்படும் பள்ளி, கல்லூரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் - தலைமை செயலாளர் எச்சரிக்கை
தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு மாணவர்கள் மற்றும் கல்லூரி இறுதியாண்டு மாணவர்கள் தவிர மற்ற அனைவருக்கும் ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடத்தப்பட வேண்டும் என தலைமை செயலாளர் அறிவித்துள்ளார்.

இந்த உத்தரவை மீறி மாணவர்களை வரவழைத்து வகுப்புகள் நடத்தும் பள்ளி, கல்லூரிகள் மீது பொது சுகாதார சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை செயலர் எச்சரித்துள்ளார். மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வராத சிபிஎஸ்இ பள்ளிகளில்  தனிமனித இடைவெளி உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மிக கவனத்துடன் கடைப்பிடிக்க வேண்டும் என்றார்.


மேலும், ``கிண்டியில் உள்ள மத்திய பயிற்சி மையத்தில் 150 பேருக்கு மாதிரிகள் எடுக்கப்பட்டு 18 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் 300 பேருக்கு மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன. ஆவடியிலிருந்து வரும் நபர் ஒருவர் மூலமாக கொரோனா பரவ ஆரம்பித்துள்ளது. தொற்று வந்ததால் அந்த நபர் வேலை செய்யும் நிறுவனத்தை உடனே மூட முடியாது. அனைவருக்கும் பரிசோதனை செய்து தொற்று நெகடிவ் என வந்தால் மட்டுமே ஊருக்கு அனுப்ப முடியும். பாசிடிவ் என வந்தால் சிகிச்சை மேற்கொள்ளப்படும்” என தெரிவித்துள்ளார்.

பிரிட்டன் உருமாறிய கொரோனா 14 பேருக்கும் தென் ஆப்பரிக்கா உருமாறிய கொரோனா ஒருவருக்கும் கண்டறியப்பட்டது. அவர்கள் அனைவரும் குணமடைந்து வீடு திரும்பி விட்டனர். உருமாறிய கொரோனாவால் பாதிப்பு அதிகரிக்கவில்லை  என மத்திய அரசு கூறியுள்ளது.

``நகர்ப்புறங்களில் 1.22 லட்சம் தெருக்களில் 4 ஆயிரத்துக்கும் குறைவான தெருக்களில் தொற்று பரவியுள்ளது. மாநிலம் முழுவதும் 512 இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக உள்ளன.
கோயில் திருவிழாக்களில் கூட்டம் கூடுவது குறித்தும் விழாக்களில் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் குறித்து அறிவிப்பு வெளியாகும்.
பேருந்தில் செல்பவர்கள் கூட்டத்தை தவிர்க்க பயணத்தை முன் கூட்டியே திட்டமிட்டு முக கவசம் அணிந்து செல்ல வேண்டும்.
தமிழகத்தில் மார்ச் முதல் வாரத்தில் 500 க்கும் குறைவாக இருந்த ஒரு நாள் .ம்பாதிப்பு தற்போது 1700-க்கும் மேலாக உள்ளது. இந்த எண்ணிக்கை வரும் நாட்களில் 2ஆயிரத்தை தாண்டும்” எனவும் தெரிவித்துள்ளார்.

தேர்தல் பணியில் ஈடுபடும் அனைவரும் வயது வரம்பின்றி தடுப்பூசியை பேட்டுக்கொள்ள வேண்டும். இதுவரை 40% தேர்தல் பணியாளர்கள் மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments