மணமேல்குடி அருகே சீதாராமப்பட்டிணத்தில் இன்று (28.03.2021, ஞாயிற்றுக்கிழமை), பட்டமளிப்பு நிகழ்ச்சிக்கு அழைப்பு
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே உள்ள.சீதாராமப்பட்டிணத்தில் தற்போது இங்கே ஓர் அழகிய இறை இல்லம், பாழடைந்த கட்டிடமாக, பராமரிப்பற்று கிடந்ததை அப்பகுதியிலுள்ள சில நல்லுள்ளம் கொண்டவர்களின் பெரும் தியாகத்தினால் இப்பொழுது அழகிய பள்ளிவாசலாக மாறியுள்ளது.

தற்போது இந்த ஊரில் வசிக்கும் இஸ்லாமிய குடும்பத்தினரோ, விரல் விட்டு எண்ணிக்கொள்ள முடியுமான வெறும் நான்கு குடித்தனமே, இந்த நான்கு குடித்தன, குடும்பத்திலிருந்தும், நான்கு ஆலிம் மார்களை உருவாக்கியுள்ளனர். இறைவனின் மாபெரும் கிருபையால் தற்போது உருவாக்கப்பட்டிருக்கும் இந்த நான்கு ஆலிம் மார்களுக்கும் மட்டுமின்றி ஈமான், இஸ்லாம் இவை என்றால் என்னவென்றே அறிந்திருக்காத முந்தைய அம்மக்களுக்கு மார்க்க கல்வியின் மகத்துவம் அறிய வைத்து, மார்க்கத்தின் அடிப்படை விஷயங்களிலிருந்து, அனைத்து விடயங்களையும் அழகுற கற்பித்துக்கொடுத்து தற்போது அந்த நான்கு குடும்பத்திலிருந்தும், நான்கு ஆலிம்களை உருவாக்கிய பெருமை மாஷா அல்லாஹ் தற்போது அந்த பள்ளியினை தத்தெடுத்து, சிறந்த முறையில் பராமரித்து வரும், அந்த பள்ளியின் இமாமுக்கே சேரும்.

இன்று (28.03.2021, ஞாயிற்றுக்கிழமை), மாலை அஸர் தொழுகைக்கு பின்பு, அந்த நான்கு இளம் மார்க்க கல்வியாளர்களுக்கும் பட்டமளிப்பு நிகழ்வு நடைபெற உள்ளது.அந்த ஊரை சுற்றியுள்ள கடலோர இஸ்லாமிய ஊர் பொதுமக்கள், ஜமாஅத்தார்கள், இளைஞர்கள் என யாவரும் பெருந்திரலாக கலந்துக்கொண்டு நிகழ்வினை சிறப்பித்து தருவதோடு, அம்மகளுக்காக துஆ-வும் செய்திட வேண்டுமாய் அன்போடு அழைக்கின்றனர்

 சீதாராமப்பட்டிணம் கிராம, ஊர் பொதுமக்கள் மற்றும் பள்ளி நிர்வாகிகள்

தகவல் : அஜ்மீர் கான் ,கோட்டைப்பட்டிணம்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments