80 வயதிற்கு மேற்பட்டோருக்கான தபால் வாக்குப்பதிவு தொடங்கியது




புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் 80 வயதிற்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப்பதிவு நேற்று முதல் தொடங்கியது. புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கூழையான்விடுதியில் 80 வயதிற்கு மேற்பட்டோரிடம் தபால் வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. தபால் வாக்கிற்கு விண்ணப்பித்தவர்களின் முகவரியில் அவர்களது வீட்டிற்கு தபால் வாக்குச்சீட்டு படிவத்துடன் தேர்தல் பிரிவு ஊழியர்கள் குழுக்களாக சென்றனர். ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று அந்த வாக்காளர்களின் அடையாள அட்டையை சரிபார்த்து, தபால் ஓட்டு படிவத்தை எடுத்து கொடுத்து, அதற்கான விண்ணப்பத்தில் கையெழுத்து பெற்றனர். சிலர் கையெழுத்து போடத் தெரியாததால் கைரேகையை பதிவிட்டனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் 80 வயதிற்கு மேற்பட்டோர் தபால் வாக்குகள் மொத்தம் 2 ஆயிரத்து 748-ம், மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்குகள் மொத்தம் 553-ம் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தபால் வாக்குப்பதிவு பெறும் பணியை 2 நாட்களில் முடிக்க தேர்தல் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments