கிருஷ்ணாஜிப்பட்டினம் முஸ்லிம் ஜமாஅத் நடத்தும் மன்பவுல் ஹஸனாத் பெண்கள் அரபிக்கல்லூரியின் இரண்டாம் ஆண்டு விழாவிற்கு அழைப்பு.!கிருஷ்ணாஜிப்பட்டினம் முஸ்லிம் ஜமாஅத் நடத்தும் மன்பவுல் ஹஸனாத் பெண்கள் அரபிக்கல்லூரியின் இரண்டாம் ஆண்டு விழா நடைபெற உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் கிருஷ்ணாஜிப்பட்டினம் முஸ்லிம் ஜமாஅத் நடத்தும் மன்பவுல் ஹஸனாத் பெண்கள் அரபிக்கல்லூரியின் இரண்டாம் ஆண்டு விழா வருகிற 01.04.2021 வியாழக்கிழமை மாலை 4.00 மணியளவில் மஸ்விதுன் நூர் ஜும்ஆ பள்ளிவாசலில் நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் பயான், சூரா மனனம், ஹதீஸ் மனனம், மஸ்னூன் துஆக்கள் மற்றும் குழந்தைகள் நலனில் அதிக அக்கறை கொள்வது தாயா? தந்தையா..? என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற உள்ளது.

இந்நிகழ்வில் கிருஷ்ணாஜிப்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ள கிருஷ்ணாஜிப்பட்டினம் முஸ்லிம் ஜமாஅத் சார்பாக அன்புடன் அழைக்கப்படுகிறது. 

குறிப்பு: பெண்களுக்கு தனி இடவசதி செய்யப்பட்டுள்ளது.


தகவல்: அஹமது சலீம், கிருஷ்ணாஜிப்பட்டினம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments