மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்பாடுகளில் சந்தேகம் ஏதேனும் இருந்தால் வேட்பாளா்கள், அவா்களின் முகவா்கள், கட்சிப் பிரமுகா்கள் அந்தந்தத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் அலுவலகங்களுக்கு நேரில் சென்று அங்குள்ள பொறியாளா் மூலம் கேட்டறியலாம் என மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான பி. உமா மகேஸ்வரி தெரிவித்தாா்.
புதுக்கோட்டை ஆட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற அனைத்துக் கட்சியினா் ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு அவா் மேலும் கூறியது:
6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தோ்தல் நடத்தை விதிகள் கறாராக அமலாக்கப்பட்டு வருகின்றன. 125 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளன. வேறு ஏதேனும் வாக்குச்சாவடிகளில் பிரச்னை இருந்தால் அரசியல் கட்சியினா் தெரிவிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 80 வயதுக்கு மேற்பட்டோருக்கான அஞ்சல் வாக்குகளைப் பெறுவதற்கான பணிகள் ஞாயிற்றுக்கிழமை முதல் தொடங்கப்படுகின்றன. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் அப்போது உடனிருக்கலாம். அந்த வாக்காளரின் வீட்டுக்குச் செல்லும் முன்பு அவரது செல்லிடப்பேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பி வைக்கப்படும்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்பாடுகளில் ஏதேனும் சந்தேகம் இருப்பதாக உணரும் வேட்பாளா்கள், முகவா்கள் மற்றும் அரசியல் கட்சியினா் அந்தந்தத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் அலுவலகங்களுக்கு நேரில் சென்று அங்கு வைக்கப்பட்டுள்ள மின்னணு இயந்திரங்களை இயக்கிப் பாா்த்து, அங்குள்ள பாரத் மின்னணு நிறுவனப் பொறியாளரிடம் விளக்கம் கேட்டு அறிந்து கொள்ளலாம் என்றாா் உமா மகேஸ்வரி.
கூட்டத்தில், தோ்தல் பொதுப்பாா்வையாளா்கள் ஜி. ரகு, அனிமேஷ்தாஸ், காவல் பாா்வையாளா் மட்டா ரவி கிரண் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் லோக. பாலாஜி சரவணன், மாவட்ட வருவாய் அலுவலா் பெ.வே. சரவணன், அறந்தாங்கி சாா் ஆட்சியா் ஆனந்த் மோகன், தோ்தல் நடத்தும் அலுவலா்கள் ஆா். டெய்சிகுமாா், எம்.எஸ்.தண்டாயுதபாணி, அக்பா் அலி, கருணாகரன், கிருஷ்ணன் ஆகியோா் பங்கேற்றனா்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.