திருச்சி - பொன்னமராவதி தனியார் பஸ்-லாரி மோதல்; 14 பேர் காயம்பொன்னமராவதி அருகே தனியார் பஸ்சும், லாரியும் மோதியதில் 14 பேர் காயம் அடைந்தனர்.

திருச்சியில் இருந்து ஒரு தனியார் பஸ் பொன்னமராவதியை ேநாக்கி வந்து கொண்டிருந்தது. இந்த பஸ்சை சத்தியமூர்த்தி (வயது 37) என்பவர் ஓட்டி வந்தார். இந்த பஸ் கேசராபட்டி சாலையில் வந்தபோது, கயத்தாறில் இருந்து இரும்பு கம்பி ஏற்றிக்கொண்டு வந்த லாரி மோதியது.

இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 6 பெண்கள் உள்பட 14 பேர் காயம் அடைந்தனர். இந்த விபத்தை பார்த்த அக்கம்பக்கத்தினர் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக  பொன்னமராவதியில் உள்ள வலையப்பட்டி பாப்பாயி ஆச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிசிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்து பற்றி அறிந்த பொன்னமராவதி துணை போலீஸ் சூப்பிரண்டு  செங்கமலக்கண்ணன், தாசில்தார் ஜெயபாரதி, இன்ஸ்பெக்டர் தனபால் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.பின்னர் பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு விபத்தில் சிக்கிய லாரியையும், பஸ்சையும் மீட்டனர். இந்த விபத்தால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

விபத்தில் படுகாயம் அடைந்த வேகுப்பட்டி அருகே ஏனமேடு பகுதியை சேர்ந்த முருகேசன் (வயது 70) என்பவர் மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். விபத்து குறித்து லாரி டிரைவர் செந்தில் கொடுத்த புகாரின் பேரில் பொன்னமராவதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments