அதிமுகவுடன் நேரடி போட்டி: மமக போட்டியிடும் 2 தொகுதிகள் வெளியீடு



திமுக கூட்டணியில் உள்ள மனிதநேய மக்கள் கட்சிக்கு பாபநாசம், மணப்பாறை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் 187 பேர் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. இது கடந்த 30 ஆண்டுகளில் நிகழாத ஒன்று. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய நான்கு கட்சிகளுக்கு தலா 6 தொகுதிகள் ஒதுக்கி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. 

மனிதநேய மக்கள் கட்சிக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி, இரண்டு தொகுதிகளின் பட்டியல் இன்று வெளியானது. அதன்படி, மனிதநேய மக்கள் கட்சிக்கு பாபநாசம், மணப்பாறை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இரண்டு தொகுதிகளிலும் அதிமுகவை மமக நேரடியாக எதிர்கொள்கிறது

இந்நிலையில் திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி போட்டியிடும் 2 தொகுதிகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

மனிதநேய மக்கள் கட்சி போட்டியிடும் தொகுதிகள் விவரம் வருமாறு:- 

1.மணப்பாறை (தனி)
2. பாபநாசம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments