பெரம்பலூர் மாவட்டம் , வேப்பந்தட்டை வட்டம் , வி.களத்தூர் கிராமம் மெயின் ரோடு பகுதியில் வசிக்கும் பழனிமுத்து மகன் மணி அவர்கள் ரியாத் சுவைதியில் டைலராக பணியாற்றி வந்துள்ளார். தாய் நாட்டுக்கு திரும்ப எத்தனித்து புறப்படும் நிலையில் கடந்த 24-02-2021 அன்று மாரடைப்பால் இறந்துவிட்டார்.
இச்செய்தியை அறிந்த உறவினர்கள் செய்வதறியாத நிலையில் விகளத்தூர் மனிதநேய மக்கள் கட்சியின் கிளை தலைவர் ஜமீல் பாஷாவை தொடர்பு கொண்டு தாயகத்திற்கு உடலை பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுத்தனர்.
கோரிக்கையின் அடிப்படையில் தகவலைப் பெற்ற ரியாத் மண்டல சமூக நலத்துறை செயலாளர் திருப்பூண்டி அப்துல்ஹமீது அவர்கள் ரியாத் மத்திய மண்டல மமக தலைவர் மீமிசல் நூர் முஹம்மது அவர்களின் வழிகாட்டுதலின்படி மணி அவர்கள் பணியாற்றிய முதலாளியை தொடர்பு கொண்டு மருத்துவமனையிலிருந்து உடலை வாங்க தேவையான ஆவணங்களை மணி அவர்களின் மகன் சக்திவேலுடன் இணைந்து துரிதமாக செயல்பட்டு தூதரக ஒத்துழைப்புடன் ஆவணங்களை தயார் செய்தார்.
அதனைத் தொடர்ந்து 09-03-2021செவ்வாய்கிழமை அன்று இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலமாக மணி அவர்களின் உடல் 10-03-2021 விடியல்காலை 1 மணிக்கு சென்னை விமானநிலையம் சென்றடைந்தது.
சென்னை விமான நிலையத்தில் இருந்து தமுமுக ஆம்புலன்ஸில் இறந்த மணி உடலை சொந்தஊருக்கு எடுத்து செல்வதற்கான ஆம்புலன்ஸ் ஏற்பாடுகளை ரியாத் மண்டல மமக மக்கள் தொடர்பாளர் ஷாக்கீர் பேக் மற்றும் ஷாஜஹான் பேக் அவர்கள் ஏற்பாடு செய்தார்கள்.
விமான நிலையத்திலிருந்து மணி உடலை பெற்ற பெரம்பலூர் மாவட்ட மற்றும் வி களத்தூர் மனித நேய மக்கள் கட்சியின் நிர்வாகிகள் அவரது சொந்த ஊருக்கு எடுத்துச் சென்று இடுகாடு வரை உடனிருந்து உதவி செய்தனர்.மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் சுல்தான் மொய்தீன், சமூகநீதி மாணவர் இயக்கத்தின் மாவட்ட செயலாளர் முஹம்மது,விகளத்தூர் மனிதநேய மக்கள் கட்சியின் நகர தலைவர் ஜமீல் பாஷா மற்றும் தொண்டர் அணியைச் சேர்ந்த நிர்வாகிகள் பலரும் பிரேதத்தை தங்கள் தோள்களில் சுமந்து இறுதி சடங்கு செய்வதற்கு உதவி செய்தனர்.
மனிதநேய மிக்க இப்பணியை எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி மணி உடலை எங்களிடம் ஒப்படைத்தீர்கள் என்று அவரது குடும்பத்தினர் கண்ணீருடன் நன்றி கூறினர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.