30 ஆண்டுகளில் 3 லட்சம் மரக்கன்றுகள்..! கோவையைச் சேர்ந்த மாரிமுத்து யோகநாதனுக்கு குவியும் பாராட்டுகள்
Tree men என்று அழைக்கப்படும் கோவையைச் சேர்ந்த பேருந்து நடத்துனரான மாரிமுத்து யோகநாதனுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
கடந்த 30ஆண்டுகளில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு இயற்கையுடன் அவர் வாழ்ந்து வருகிறார். சுற்றுச்சூழல் ஆர்வலரான மாரிமுத்து, தன் சம்பளப் பணத்தில் 40 சதவீதத்தை மரக்கன்றுகளை வாங்குவதற்கு பயன்படுத்துகிறார். மேலும் 3ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்களில் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்.
பேருந்தில் பயணிக்கும் பயணிகளுக்கு இலவசமாக மரக்கன்றுகளையும் அவர் வழங்கி வருகிறார். முன்னாள் துணை குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரிடமிருந்து eco warrior விருதும், தமிழக அரசின் சத்ரு சுஜால் சேவை வீரர் உள்ளிட்ட ஏராளமான விருதுகள் அவருக்கு கிடைத்துள்ளன
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.