வாக்களிக்க போறீங்களா? இதையெல்லாம் கவனத்தில் வச்சிக்கோங்க!சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்க வருபவர்கள், தங்களின் அடையாளத்தை மெய்பிப்பதற்கான வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை அளிக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

வாக்காளர் அடையாள அட்டையை அளிக்க இயலாதவர்கள், ஆதார் அட்டை, பான்கார்டு, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் உள்ளிட்டவற்றில் ஏதாவது ஒன்றை காண்பிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது. புகைப்பட வாக்காளர் சீட்டிற்கு பதிலாக, வாக்காளர்களின் வசதிக்காக, வாக்காளர் தகவல் சீட்டு வழங்கப்படும் எனக் கூறியுள்ள தேர்தல் ஆணையம், வாக்காளரின் பெயர், வாக்குச்சாவடிக்கு அனுப்பப்பட்ட பட்டியலில் இடம்பெற்றிருந்தால் மட்டுமே வாக்களிக்க முடியும் எனத் தெரிவித்துள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments