கோபாலப்பட்டிணத்தில் சுட்டெரித்த கோடை வெயில்!!



தமிழகம் முழுவதும் கோடை காலம் துவங்கியுள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. திருச்சி , சென்னை , வேலூர் போன்ற பெருநகரங்களில் வெயில் 100 டிகிரிக்கும் மேல் கொழுத்திவருகிறது.

இந்தநிலையில் கடந்த சில நாட்களாக புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் நிரம்பிய கண்மாய்களில் தண்ணீர் மளமளவென்று குறைந்து வருகிறது. 

கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வெயிலின் உக்கிரம் அனலாக கொதித்தது. இரு சக்கர வாகனங்களில் சென்றவர்களின் முகத்தில் அனல் காற்று வீசியது. அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்பே வெயிலின் தாக்கம் இப்படி அதிகமாக இருப்பதை கண்டு பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். மே மாதத்தில் வெயில் எப்படி சுட்டெரிக்குமோ? என்று கவலை அடைந்துள்ளனர்.

வெயிலின் காரணமாக மக்கள் பெரும்பாலும் காலை நேரங்களில் வெளியில் செல்வதையே தவிர்த்து வருகின்றனர்.

வெயிலின் உக்கிரத்தில் தப்பிக்க, தங்களை பாதுகாத்து கொள்ள குளிர்ச்சி தரக்கூடிய உணவுகளை பொதுமக்கள் சாப்பிட தொடங்கி உள்ளனர். .

இதேபோல வெள்ளரி பிஞ்சுகள், பழ வகைகளையும் வாங்கி சாப்பிடுகின்றனர். பழ ஜூஸ்களையும், குளிர்பானங்களையும் வாங்கி அருந்துகின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments