தடைகாலம் எதிரொலி: வெறிச்சோடி காணப்படும் கோட்டைப்பட்டினம் மீன்பிடி தளம்



புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதியில் உள்ள மீன்பிடி தளங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. மீன்களின் இனப்பெருக்க காலமாக கருதி தமிழகம் முழுவதும் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை 61 நாட்கள் விசைப்படகு மூலம் மீன்பிடிக்க மீன்வளத்துறையினரால் தடைவிதிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மற்றும் கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லாமல் தங்கள் படகுகளை கரையில் வரிசையாக நிறுத்தி வைத்துள்ளனர். 

இந்நிலையில் எப்போதுமே பரப்பரப்பாக காணப்படும் மீன்பிடி தளம் தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது. இதற்கான காரணம் இங்கு விசைப்படகு மூலம் மீன்பிடி தொழில் செய்பவர்களில் பெரும்பாலானோர் நாகப்பட்டினம், காரைக்கால், கடலூர், ராமேஸ்வரம், குளச்சல், கன்னியாகுமரி பகுதியை சேர்ந்தவர்கள். இவர்கள் காலங்காலமாக இங்கு தங்கி மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். 

தற்போது மீன்பிடி தடைகாலம் என்பதாலும், பள்ளிகள் விடுமுறை என்பதாலும் மீனவர்கள் குடும்பத்துடன் தங்கள் சொந்த ஊருக்கு சென்று விட்டனர். இதனால் எப்போதுமே பரபரப்பாக காணப்படும் மீன்பிடி தளங்கள் ஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments