அறந்தாங்கி வாரச்சந்தையில் சில்லறை வியாபாரிகளுக்கு அனுமதி மறுத்ததை கண்டித்து சாலை மறியல்



அறந்தாங்கி பகுதியில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில் நேற்று அறந்தாங்கி-பேராவூரணி சாலையில் செவ்வாய் சந்தை நடந்தது. சந்தையில் கூட்டம் அதிகமாக கூட கூடாது. இதனால் கொரோனா தொற்று மேலும் அதிகமாக பரவாய்ப்பு உள்ளது. எனவே சந்தையில் வியாபாரம் செய்ய வேண்டாம் என நகராட்சி நிர்வாகத்தினர் வியாபாரிகளிடம் கூறினர். 

இதற்கு வியாபாரிகள் எங்களுக்கு முன்னதாக ஏதும் தகவல் சொல்லவில்லை. இதனால் நாங்கள் வியாபாரம் செய்ய பொருட்கள் எல்லாம் சந்தைக்கு கொண்டு வந்து விட்டோம். இதனால் வியாபாரம் செய்ய எங்களை விடுங்கள் என கோரி வியாபாரிகள் பேராவூரணி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். 

இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் ஆணையர் அய்யனார் பேச்சு வார்த்தை நடத்தியதை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். வழக்கம் போல் சந்தை செயல்பட்டது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments