புதுக்கோட்டை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான திட்டங்களில் இடைத்தரகர்கள் செயல்பட்டால் நடவடிக்கை! கலெக்டர் எச்சரிக்கை!!புதுக்கோட்டை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் திட்டம் அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தினை மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்கிறேன் அல்லது பெற்றுத் தருகிறேன் என்று சொல்லி தனிநபரோ, சங்கங்களோ, நிறுவனங்களோ, பணம் அல்லது வேறு எந்த வகையில் ஆதாரம் பெறும் நோக்கில் செயல்பட்டால் மாற்றுத்திறனாளிகள் அல்லது அவர்களின் பெற்றோர், பாதுகாவலர்கள் புதுக்கோட்டை பஸ் நிலையம் அருகில் உள்ள மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது 04322-223678 என்ற அலுவலக தொலைபேசி எண்ணிலோ புகார்களை தெரிவிக்கலாம். இதுதொடர்பான புகார்கள் வரப்பெற்றால் மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சட்டத்தின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் உமாமகேஸ்வரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments